திருகோணமலையில் நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்த புதிய உத்தி!

திருகோணமலை நகராட்சிமன்ற எல்லைக்குள் காணப்படுகின்ற வடிகான்கள் சரியான முறையில் அமைக்கப்படாததால், கழிவுநர் தேங்கி நுளம்பு பெருக்கம் அதிகரித்து வருகிறது.

வடிகான்களை சரிசெய்யும் திட்டத்திற்கு, ஆசிய அபிவிருத்தி வங்கி உதவி புரியவுள்ளது. இதற்கான திட்ட வரைபடம் (Strom Water Drainage plan) தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் நடைமுறைப்படுத்தும் வரையில், நுளம்பு பெருக்கத்தை தடுக்க, தற்காலிக ஏற்பாடொன்றை திருகோணமலை நகராட்சி மன்றம் ஆரம்பித்துள்ளது. அதன்படி, கழிவுநீர் தேங்கி நிற்கும் வடிகான்களில் நகராட்சிமன்றம் கடல்நீரை பாய்ச்சி வருகிறது. நகரசபைக்கு சொந்தமாக பவுசர்கள் மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here