யாழ் பேருந்து நிலையத்தில் மயங்கிய முதியவர்; ஒரு மணித்தியாலம் யாரும் உதவாத அவலம்: உயிரிழந்தார்!

கோப்பு படம்

யாழ் பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்த முதியவர் ஒருவருக்கு சுமார் ஒரு மணித்தியாலம் வரையிலும் யாரும் உதவிபுரியாத அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றது. பேருந்து நிலையத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ள யாழ் போதனா வைத்தியசாலைக்கு, ஒரு மணித்தியாலத்தின் பின்னர் கொண்டு செல்லப்பட்டவர் உயிரிழந்தார்.

இந்த அதிர்ச்சி சம்பவம் நேற்று (9) இடம்பெற்றது.

முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த பேருந்தில் அவர் பயணித்தார். யாழ் நகருக்கு பேருந்து வந்த நிலையில், திடீரென அவர் மயங்கி சரிந்தார். எனினும், அவருக்கு யாரும் உதவிபுரியவில்லை. சுமார் ஒரு மணிநேரம் மயங்கிய நிலையிலேயே காணப்பட்டார். எனினும், அவருக்கு யாரும் உதவவில்லை.

ஒரு மணித்தியாலத்தின் பின்னர் ஒருவர் உதவினார். அருகிலிருந்து வைத்தியசாலைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டபோதும், சிறிது நேரத்திலேயே அவரது உயிர்பிரிந்தது.  உடனடியாக முதியவரை அனுமதித்திருந்தால் காப்பாற்றியிருக்கலாமென வைத்தியர்கள் குறிப்பிட்டனர்.

குருநகர், கடற்கரை வீதியை சேர்ந்த விக்ரர் வின்ரன் (59) என்பவரே உயிரிழந்தார்.

பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here