தமது ஊரின் சங்ககால தொன்மையை கண்டறிந்து மாணவர்கள் சாதனை!

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில், அரச பாடசாலையை சேர்ந்த மாணவர்கள்,சங்ககால ஊர் இருந்த வரலாற்று தடயத்தை கண்டுபித்ததன் மூலம் வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

வளானர் அரச பாடசாலையை சர்ந்த உயர்நிலைப்பள்ளி மாணவர்கள இந்த சாதனையை படைத்துள்ளனர்.

ராமநாதபுரம் கீழக்கரை அருகில் நத்தம் என்னும் கிராமம் உள்ளது.இந்த ஊரில் வரலாற்று தடயத்தையும், புதிய கற்காலத்தைச் சேர்ந்த பொருட்களையும், இந்த மாணவர்கள் கண்டறிந்துள்ளனர்.

குறித்த கிராமத்தில் கருப்பு மற்றும் சிவப்பு நிற பானை ஓடுகள் மற்றும இருப்பு தாது, இரும்ப துண்டுகள், அரைப்புக்கள், வட்டசில்லுகள், உடைந்த மான்கொம்பு, மணி சய்யும் கற்கள் என்பன கண்டடுக்கப்பட்டுள்ளது.

கானத்திடலில் உள்ள  ஏக்கர் பரப்பளவிலும் பழமையான பானை ஓடுகள் காணப்படுகிறன. கற்காலம் முதல் கருப்பு, சிவப்பு மட்பாண்டங்களை பயன்படுத்தி வந்துள்ளனர். கி.மு 300 முதல் -கி.பி.300 வரையிலான சங்ககாலத்தில், இது அதிகமாக பயன்படுத்தப்பட்டதால், சங்ககால பானைஓடுகள் என்கிறார்கள்.

அத்தோடு கி.மு 300-1000 ஆண்டுவரையிலான காலத்தில், கற்கால மனிதர்கள் வலுவான கற்கருவிகளை பயன்படுத்தினர். இங்கு கிடைத்த கற்கோடரி புதிய கற்காலத்தை சேர்ந்தது. இதன் நீளம் 5.8 செ.மீ மற்றும் அகலம் 5.2 செ.மீ ஆகும்.இதன் முனை மழுங்கியுள்ளதாகவும் இது 5000 ஆண்டு பழமைவாய்ந்தது என்றும் கூறப்படுகிறது.

கருப்பு, சிவப்பு பானை ஓடுகளை வைத்து பார்க்கையில் இவ்வூர் வை ஆற்றங்கரையில் வசித்த சங்ககால மக்களின் குடியிருப்பாக கருதப்படுகிறது. இவ்வூர் அருகே பனையங்கால் என்ற வைகையின் ஆறொன்றும் ஓடுகிறது.குறித்த பனையன் என்ற சொல் சங்ககால பாண்டியர்கள் வம்சத்துடன் தொடர்புடையதென கருதப்படுகிறது.

இவ்வாறு தமது முயற்சியினால் ஒரு கிராமத்தின் பழமையை கண்டறியும் முயற்சியில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர் இக்கல்லூரி மாணவர்கள். எனினும் இவர்களின் ஆராட்சியை தொல்பொருள் திணைக்களம் கையிலெடுத்து அவர்களின் ஆய்வின் மூலமே இத்தகவல்களை நிலைநாட்ட முடியும் என கருதப்படுகிறது.

எனவே தொல்பொருட்திணைக்களம் இவ்விடத்தில் ஆய்வை மேற்கொண்டு சங்ககால தொன்மையை வெளிக்கொண்டுவரவேண்டும் என்பது அம்மாணவர்களின் விருப்பாக உள்ளது.

 

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here