பா.ஜ, காங்கிரசுடன் கூட்டணி இல்லை!

வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ- காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுடனும் கூட்டணி வைப்பதில்லையென பிஜு ஜனதா தளம் முடிவு செய்துள்ளது.

ஏப்ரல் – மே மாதங்களில் லோக்சபா தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜ வுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைத்து காங்கிரஸ் தலைமையில் ‘மெகா’ கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு ஈடுபட்டுள்ளார்.

பா.ஜ – காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் அல்லாத ஒரு கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியின் தலைவருமான சந்திரசேகர ராவ் ஈடுபட்டு உள்ளார்.

இது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோரை சந்தித்து பேசினார்.

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று கூறுகையில் ” தேர்தலில் பா.ஜ – காங்கிரஸ் ஆகிய கட்சிகளில் இருந்து விலகி இருக்கவே எங்கள் கட்சி நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். கூட்டணி தொடர்பான விஷயங்களில் நிர்வாகிகளின் விருப்பத்தின் அடிப்படையிலேயே முடிவு எடுக்கப்படும்” என்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here