சூரிய மண்டலத்தில் புதிய கோள்!

அமெரிக்காவின் நாசா மையம், கடந்த ஏப்ரலில் ‘டி.இ.எஸ்.எஸ்.,’ என்ற செயற்கை கோளை விண்ணுக்கு அனுப்பியது. இச்செயற்கை கோள், சூரிய மண்டலத்துக்கு அப்பால் பூமியில் இருந்து 53 ஒளி ஆண்டுகள் துாரத்தில் புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளது. மிகச் சிறிய கிரகமான இது, பூமியை விட மூன்று மடங்கு பெரிது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து, மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவன ஆராய்ச்சியாளர் டயானா டிரகோமர் கூறியுள்ளது: இக்கிரகத்தில் பாறைகள் மற்றும் அதிகளவில் வாயு நிரம்பியுள்ளது. நைதரசன் வாயு உள்ளதால் தண்ணீர் இருக்க வாய்ப்பு உள்ளது. இது உயிரினங்கள் வாழ தகுதியுடைய கிரகம் என்று கூறியுள்ளார்.

இக்கிரகத்திற்கு எச்டி 21749 பி என பெயரிடப்பட்டுள்ளது. இதன் அருகே அதிக வெளிச்சம் மற்றும் குளிர்ச்சியுடன் கூடிய நட்சத்திரம் காணப்படுவதாக நாசா மையம் தெரிவிக்கிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here