உலகின் விலை உயர்ந்த உதடுகள்

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த வைர நிறுவனம் ஒன்று, மொடல் அழகியின் உதட்டில், உலகின் விலை உயர்ந்த வைரம் பதித்த ‘லிப் ஆர்ட்’ செய்து கின்னஸ் சாதனை நிகழ்த்தி உள்ளது.

அவுஸ்திரேலியாவில், ரோசன் டோரோப் என்ற வைர நிறுவனம் உள்ளது. 1963ல் துவங்கப்பட்ட இந்நிறுவனம், தங்களது 50 வது ஆண்டை முன்னிட்டு மொடல் அழகி சார்லி ஒக்டேவியாவின் உதடுகளில் வைரத்தை பதித்து, லிப் ஆர்ட் செய்து, கின்னஸ் சாதனை செய்துள்ளது.

இந்த லிப் ஆர்டிற்காக, 3.78 கோடி மதிப்புள்ள 126 வைரக் கற்களைப் பயன்படுத்தியுள்ளனர். அதன் மொத்த எடை 22.92 கரட்.

இந்த சாதனையை நிகழ்த்திய க்ளார் மார்க் கூறுகையில், ”இந்தப் பணி முழுமை பெற இரண்டரை மணி நேரம் ஆனது. வடிவமைப்பு, திட்டமிடல் என நிகழ்ச்சி முடியும் வரை பரபரப்பாக இருந்தது” என்றார்.
லிப் ஆர்ட் செய்யப்பட்ட அம்மணியின்

உதடுகள்தான் உலகின் விலை உயர்ந்த உதடுகளாம்!

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here