ஜெயலலிதா மரணம்; யாராக இருந்தாலும் கைது செய்வோம்: ஸ்டாலின்

தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், ஜெயலலிதா மரணத்துக்கு காரணமானவர்களை சிறையில் அடைப்பதே எனது முதல் பணி’ என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தஞ்சை மாவட்டம் மாதாகோட்டையில் நடந்த ஊராட்சி சபை கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: ஆட்சி மாற்றம் வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நம்மை விட மக்களுக்கு அதிகம் உள்ளது. தமிழகத்தின் அவலநிலைக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அது தி.மு.க.,வுக்கு தொடக்கப்புள்ளியாக இருக்க வேண்டும்.

நாம் நினைப்பவர்கள் பிரதமராக வந்தால்தான் தமிழகத்திற்கு தேவையானதை பெற முடியும். லோக்சபா தேர்தலுடன் சட்டசபை அல்லது உள்ளாட்சி தேர்தல் வரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

தி.மு.க.,ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்து, யாராக இருந்தாலும் கைது செய்வோம். ஜெ., மருத்துவமனையில் இருந்தபோது உடல்நிலை குறித்து தெளிவான அறிக்கைகள் வழங்கப்படவில்லை. அதேசமயம் கருணாநிதி மருத்துவமனையில் இருந்தபோது, அவரது உடல்நிலை குறித்து தி.மு.க., முறையாக அறிக்கை கொடுத்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here