2019 ஆண்டிற்கான உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசை: ஆசிய நாடுகள் ஆதிக்கம்!

2019-ஆம் ஆண்டிற்கான உலகத் தரவரிசையில் ஜப்பான் நாட்டுக் கடவுச்சீட்டே அதிக சக்திவாய்ந்தது என ஹென்றி இண்டெக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இரண்டாம் இடத்தில், சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுக்கள் இடம்பிடித்தன. இதன்மூலம் உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுக்கள் பட்டியலில் ஆசிய நாடுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன.

முதலிடத்தை பிடித்துள்ள ஜப்பானிய குடிமக்கள் விசா இல்லாத பயணத்தை 190 நாடுகளுக்கு மேற்கொள்ளலாம் என அந்நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது.

ஜப்பானுக்கு அடுத்ததாக உள்ள சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா நாட்டு மக்கள் 189 இடங்களுக்கு விசா பெறாமல் பயணத்தை மேற்கொள்ளலாம்.

ஜெர்மனி மற்றும் பிரான்ஸ், முறையே மூன்றாவது இடத்தில் இடம் பெற்றுள்ளன. விசா இல்லாமல் சுமார் 188 இடங்களுக்கு அதன் மக்கள் பயணத்தை மேற்கொள்ள முடியும். அமெரிக்காவும், இங்கிலாந்தும் ஆறாம் இடத்தில் இடம் பெற்றுள்ளன. கடந்த 2015- ஆம் ஆண்டு, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் கடவுச்சீட்டுக்கள் வலுவானதாகக் கருதப்பட்டன.

இன்னொரு ஆசிய நாடான மலேசிய நாட்டுக் கடவுச்சீட்டு 12-வது இடத்தில் இடம் பெற்றுள்ளது.

சரி, இந்த பட்டியலில் இலங்கை, இந்திய நாடுகள் எத்தனையாவது இடத்தில் இருக்கிறதென்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. அதையும் சொல்லி விடுகிறோம்.

இலங்கை 95வது இடத்தில் உள்ளது. இன்னொரு நாடும் 95வது இடத்தில் உள்ளது. அது ஆபிரிக்க நாடான கொங்கோ. இரண்டு நாட்டு கடவுச்சீட்டுக்கும் 43 நாடுகளிற்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்.

இந்தியா 79வது இடத்தில் உள்ளது. இந்தியாவுடன் மொங்கோலியா, மொரக்கோ, ஆர்மீனியா, பெனின் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த நாட்டு கடவுச்சீட்டுடன் 61 நாடுகளிற்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here