பிரபல நடிகையை கணவரே மாடியிலிருந்து தள்ளி விழுத்தினாரா?

பிரபல ஒடியா மொழி நடிகை நிகிதா என்ற லட்சுமி பிரியா (32) மாடியில் இருந்து விழுந்து மரணம் அடைந்தார். அவர் தவறி விழுந்து மரணமடைந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், இது கொலையென நடிகையின் தந்தை புகார் அளித்துள்ளார்.

‘சோரி சோரி மனா சோரி, மா ரா பனடாகனி’ உள்ளிட்ட படங்களில் நிகிதா நடித்துள்ளார். டி.வி தொடர்களிலும் நடித்தார். லிபன் சாபு என்பவரை திருமணம் செய்துள்ளார்.

பெற்றோர் வீட்டுக்கு சென்ற நிகிதா வீட்டு மாடியில் நின்று கொண்டிருந்தார். திடீரென்று அவர் அலறும் சத்தம் கேட்டு குடும்பத்தினர் ஓடி வந்து பார்த்தனர். நிகிதா மாடியில் இருந்து கீழே விழுந்து கிடந்தார். அப்போது அவரது கணவர் மாடியில் நின்று கொண்டிருந்தார். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட நிகிதா சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

எனது மகளை அவரது கணவர் லிபன் மாடியில் இருந்து தள்ளி கொலை செய்து விட்டார் என்று நிகிதாவின் தந்தை சனதன் பொலிசில் புகார் அளித்துள்ளார். “நிகிதாவை அவரது கணவரும் அவரது குடும்பத்தினரும் மனதளவில் கொடுமைப்படுத்தினர். சம்பவத்தன்று நிகிதாவுக்கும் அவரது கணவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பிரச்சினையை பேசி தீர்க்க இருவரும் மாடிக்கு சென்றனர்.

சிறிது நேரத்தில் என் மகள் மாடியில் இருந்து விழுந்து இறந்து கிடந்தார். நிகிதாவை லிபன் சாபு திட்டமிட்டு கொலை செய்துள்ளார்” என்று மனுவில் கூறியுள்ளார்.

இந்த புகாரின் பேரில் லிபனை பொலிசார் கைது செய்தனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here