அழகியை ஜெர்மனுக்கு அழைத்துச் சென்றதன் பலன்.. பதவியிழந்த மன்னர் மகிழ்ச்சியில்!

மலேசிய மன்னர் பதவியை துறந்த இரண்டாம் நாள், அவரது மனைவியான மொடல் அழகி கர்ப்பமாக இருக்கும் செய்தி வெளியாகியுள்ளது.

மலேசிய மன்னர் 5-வது சுல்தான் முகமது ரஷ்ய மொடல் அழகி ஒக்சானா வோவோடீனா (25) என்பரை திருமணம் செய்து கொண்டார். ஒக்சானா கடந்த ஏப்ரல் மாதம் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.

தற்போது ரஷ்ய அழகி கர்ப்பமுற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்ய பத்திரிக்கைகள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. அதில் திருமணமான உடனேயே சுல்தான் முகமது (49), தனது மனைவியை அழைத்துக் கொண்டு ஜெர்மனியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்பட்டு உள்ளது.

தங்கள் இருவருக்கும் இடையில் 24 வயது வித்தியாசம் இருப்பதால், தங்கள் இனப்பெருக்க நலன் குறித்து பரிசோதனைகள் மேற்கொள்வதற்காகவே ஜெர்மனிக்கு சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின. இரண்டே ஆண்டுகள் மன்னராக பதவி வகித்த நிலையில், தனது மன்னர் பதவியை துறப்பதாக அறிவித்தார் சுல்தான். அவர் எதற்காக மன்னர் பதவியை துறக்க முடிவு செய்தார் என்பதற்கான காரணங்கள் எதுவும் கூறப்படவில்லை.

ரஷ்ய அழகியும் மொடலுமான ஒக்சானாவை மணந்தது மன்னரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியிருந்தது. ஒக்சானாவை மணம் செய்ததால் மன்னர் பலரது கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளான நிலையில், அழகியின் கவர்ச்சிப் படங்களும் செய்திகளும் வெளியாகி சமூகவலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அதனால்தான் மன்னர் தனது பதவியை இராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

இதற்கிடையில், தங்கள் முதல் குழந்தையை எதிர்பார்க்கும் தம்பதியினர், தங்கள் முழு நேரத்தையும் தங்கள் குழந்தைக்காகவே அர்ப்பணிக்க முடிவு செய்துள்ளதாக ரஷ்ய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here