நாற்காலியில் முதல்வர் வேடம்!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ரஜினியின் பேட்ட படம் வரும் 10ல் ரிலீசாகிறது. ஏற்கனவே, நடிகர் விஜய்யை வைத்து அரசியல் கதையம்சம் கொண்ட சர்க்கார் படத்தை உருவாக்கிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், தன்னுடைய அடுத்தப் படத்தில் நடிகர் ரஜினியை நடிக்க வைக்கவிருக்கிறார்.

விரைவில் அரசியல் கட்சித் துவங்கி, தமிழக முதல்வர் பதவியை பிடிக்கும் ஆவலில் இருக்கும் நடிகர் ரஜினியின் எண்ணத்துக்கு ஏற்றவாறு, புதிய படத்தின் கதையை அமைத்திருக்கிறார் முருகதாஸ். படத்துக்கு முதல்வர் நாற்காலியை மனதில் வைத்து நாற்காலி என பெயரிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

மிகுந்த பொருட் செலவில் உருவாகப் போகும் நாற்காலி படத்தில், சாதாரண மனிதராக இருக்கும் ஒருவர் அரசியலில் குதித்து எப்படியெல்லாம் படிப்படியாக முன்னேறி முதல்வர் நாற்காலியைப் பிடிக்கிறார் என்பதுதாக கதையமைப்பு பின்னப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கதையை நடிகர் ரஜினியிடம் கூறியதும், மிகுந்த சந்தோஷத்துடன், அதில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். படத்துக்கு நாற்காலி என பெயரிடப்பட்டிருப்பதாக தகவல் பரவி இருந்தாலும், அதைவிட சிறந்தப் பெயர் படத்துக்கு கிடைக்கும் பட்சத்தில் பெயர் மாற்றம் இருக்கும். இல்லாதபட்சத்தில் நாற்காலியே படப் பெயராக சூட்டப்பட்டு விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்கின்றனர். விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கவிருப்பதாகவும் கூறுகின்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here