இங்லீஷ் டீச்சருக்கு நீச்சல் உடை அணிவித்த ராய் லட்சுமி

ராய் லட்சுமிக்கு தற்போது நீயா 2ம் பாகம் படம் மட்டுமே கைவசம் உள்ளது. இந்த ஒரு படத்தை வைத்து தனது மார்க்கெட்டை எப்படி மீட்பது என்று கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார். அதற்கு அவர் கையிலெடுத்திருக்கும் ஆயுதம் கவர்ச்சிதான். ஆண்டின் தொடக்கம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைய வேண்டும் என்பதற்காக தனது இணைய தள பக்கத்தில் டூ பீஸ் நீச்சல் உடையில் கிக்கான படம் வெளியிட்டிருந்தார்.

அடுத்த ஒருவாரத்துக்குள் மற்றொரு கிக் படத்தை வெளியிட்டுள்ளார். நீச்சல் உடையில் நீச்சல் செய்ய வேண்டுமென்றால் ஒன்று கடலுக்கு செல்ல வேண்டும் அல்லது நீச்சல் குளத்துக்கு செல்ல வேண்டும் ஆனால் ராய் லட்சுமி குளியல் டப்புக்குள் நீச்சல் உடையுடன் இறங்கியிருக்கிறார்.

கூடவே தனது ஆங்கில டீச்சர் பாப்பிஜப்பால், நெருங்கிய தோழியும் மாடல் அழகியுமான சோனாலிசெய்கல் ஆகியோருக்கும் டூ பீஸ் நீச்சல் உடை மாட்டிவிட்டு அவர்களையும் பாத் டப்புக்குள் இறக்கிவிட்டிருக்கிறார். மூவருமே கேமராவுக்கு போஸ் தந்து கவர்ச்சி விருந்து படைத்திருக்கின்றனர். ராய் லட்சுமியின் கவர்ச்சி டெக்னிக் அவருக்கு பட வாய்ப்புகளை பெற்றுத்தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here