மலேசிய மாமன்னர் பதவிவிலக இந்த மொடல் அழகியா காரணம்?

மலேசிய அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத திருப்பமாக, ஆட்சியில் இருக்கும் மாமன்னர் தனது பதவியிலிருந்து நேற்று (07) விலகிக் கொண்டுள்ளார்.

கிளந்தான் மாநில சுல்தான் மாஹ்முட் தனது 15-வது மாமன்னர் என்ற பதவியிலிருந்து விலகியுள்ளார் என மாமன்னரின் அரண்மனை நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. அவரது பதவி விலகல் நேற்று முதல் அமுலுக்கு வருகின்றது.

அவரது பதவி விலகலிற்கு, முன்னாள் “மிஸ் மொஸ்கோ“ மீது அவர் கொண்ட காதலே காரணம் என கூறப்படுகிறது.

ஒக்சானா வோவோடீனா என்ற அந்த மொடல் அழகியை கடந்த வருட இறுதிப்பகுதியில் மாமன்னர் மாஹ்முட் காதல் மணம் புரிந்திருந்தார். 1993இல் பிறந்த ஒக்சானா 2015 மிஸ் மொஸ்கோ அழகியாக தெரிவானார். சர்ச்சைக்குரிய ரியாரிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டார். கண்டிப்பாக வயது வந்தவர்களிற்கு மட்டும் என்ற நிபந்தனைகளுடன் இணையத்தளங்களில் அவரது பல வீடியோக்கள் உலாவுகின்றன.

1969 இல் பிறந்த சுல்தான் மாஹ்முட் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர்.

இந்தநிலையில் இருவரும் கடந்த வருட இறுதியில் திருமணம் செய்து கொண்டனர். எனினும், ஒக்சானாவின் பின்னணி குறித்து அரசதரப்பால் குறிப்பிடப்படாமல் இருந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் கடந்த சில வாரங்களாக தீவிரமாக அவர் பற்றி விவாதிக்கப்பட்டது.

சனி முஸ்லிமான மாமன்னர், பொருத்தமற்ற ஒருவரை திருமணம் செய்து விட்டார் என விமர்சிக்கப்பட்டது. ஒக்சானாவை திருமணம் செய்ததன் மூலம், அரசருக்குரிய மரியாதைக்கு இழுக்கேற்படுத்தியதாக, மாமன்னரை தெரிவுசெய்யும மலாய் ஆட்சியாளர் மன்றத்திற்குள்ளும் விமர்சனங்கள் எழுந்தன.

மகாராணி கட்டாயம் மலாய் அல்லது முஸ்லிமாக இருக்க வேண்டுமென அவர்கள் நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது. ஒக்சானா பின்னர் முஸ்லிம் மதத்திற் மாறியிருந்தார். எனினும், அது விமர்சகர்களை திருப்திப்படுத்தவில்லை.

மாமன்னர் பதவியை துறந்தாலும், தான் வகித்த கிளந்தாள் மாநில சுல்தான் பதவியை தொடரப் போவதாக மாஹ்முட் அறிவித்திருக்கிறார். எனினும், கிளந்தான் மாநில சுல்தான், மலாய் அல்லது முஸ்லிமையே மணக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here