ஜெயப்பிரதாவாக மாறிய ஹன்சிகா!

கிரிஷ் இயக்கத்தில் கீரவானி இசையமைப்பில் பாலகிருஷ்ணா, வித்யா பாலன் மற்றும் பலர் நடிக்கும் ‘என்டிஆர் கதாநாயகடு’ தெலுங்குப் படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. மறைந்த நடிகரும், ஆந்திரா முதல்வருமாக இருந்த என்டிஆர் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. அதன் முதல் பாகம்தான் நாளை வெளியாகிறது.

என்டிஆர் பல வெற்றிப் படங்களில் பல கதாநாயகிகளுடன் நடித்துள்ளார். அவர்கள் அனைவரது கதாபாத்திரங்களிலும் தற்போதைய இளம் நடிகைகள் நடித்துள்ளார்கள். குறிப்பாக என்டிஆர் ஜோடியாக சாவித்ரி, கிருஷ்ணகுமாரி, பிரபா, ஜெயப்பிரதா, ஜெயசுதா, ஸ்ரீதேவி ஆகியோர் முக்கியமானவர்கள். அவர்களது கதாபாத்திரங்களில் சாவித்ரி ஆக நித்யா மேனன், கிருஷ்ணகுமாரி ஆக பிரணிதா, பிரபா ஆக ஸ்ரேயா, ஜெயப்பிரதா ஆக ஹன்சிகா, ஜெயசுதா ஆக பாயல் ராஜ்புத், ஸ்ரீதேவி ஆக ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

ஜெயப்பிரதா கதாபாத்திரத்தில் ஹன்சிகா இருக்கும் போஸ்டரை தற்போது வெளியிட்டுள்ளார்கள். என்டிஆர் நடித்த ‘யமகோலா’ படத்தில் இடம் பெற்ற ‘சிலக்காக கொட்டுடு கோடிதே’ என்ற பாடல் போஸ்டர்தான் அது. பெரிய காலர் வைத்த சட்டை, பெல்பாட்டம் அணிந்த என்டிஆர், பூ டிசைன் போட்ட புடவை, பெரிய கொண்டை என ஜெயப்பிரதா ஆகியோரது தோற்றத்தில் பாலகிருஷ்ணா, ஹன்சிகா அப்படியே உள்ளார்கள். அதிலும் ஜெயப்பிரதாவிடம் இருக்கும் அதே கவர்ச்சியுடன் ஹன்சிகா இருப்பது தெலுங்கு ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

நாளை வெளியாக உள்ள இந்தப் படம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘மகாநதி’ படத்தை விட அதிகம் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here