சந்தோஷத்தில் மேகா ஆகாஷ்

நடிகர் தனுஷின் “எனை நோக்கி பாயும் தோட்டா“, நடிகர் சிம்பு நடிக்கும் “வந்தா ராஜாவாத்தான் வருவேன்“ உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார் நடிகை மேகா ஆகாஷ். இவர், நடிகர் ரஜினி நடிப்பில் வரும் 10ல் ரிலீசாக இருக்கும் “பேட்ட“ படத்திலும், முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். அந்தப் படம் ரிலீஸ் ஆன பின், எனக்கு அதிக படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என கூறிக் கொண்டிருக்கிறார் மேகா ஆகாஷ்.

தமிழ் படங்களில் வரிசையாக நடித்து கொண்டிருக்கும் அவருக்கு, ஹிந்தி படத்தில் நடிக்கவும் வாய்ப்புக் கிடைத்தது. நடிகர் சூரஜ் பஞ்சாலியுடன் நடிக்கும் அந்த வாய்ப்பை மறுக்காமல் ஏற்றுக் கொண்டிருக்கும் மேகா ஆகாஷ், அந்தப் படத்திலும் நடித்து வருகிறார். இர்பான் கமல் இயக்கி வரும் அந்தப் புதிய படத்துக்கு, “சாட்டிலைட் சங்கர்“ என பெயரிடப்பட்டுள்ளது. அந்தப் படத்துக்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சாட்டிலைட் சங்கர் படம் இந்தியில் வெளியானதும், இந்தி பட வாய்ப்புகளும் அதிகரிக்கும் என சந்தோஷமாக இருக்கிறார் மேகா ஆகாஷ்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here