கள்ளக்குறிச்சி தனி மாவட்டமானது!

விழுப்புரத்தில் உள்ள கள்ளக்குறிச்சியை தனியாக பிரித்து புதிய மாவட்டமாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். தமிழகத்தின் 33 வது மாவட்டமாக உதயமாகிறது கள்ளக்குறிச்சி.

கவர்னர் உரை மீதான விவாதத்திற்கு முதல்வர் பழனிசாமி அளித்த பதிலில்;
உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் 27 நிறுவனங்களுக்கு நிர்வாக ஒப்பதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு 44 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு கிடைக்கும். 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஒற்றை சாளர திட்டத்தின் மூலம் நிறுவனங்களுக்கு உடனுக்குடன் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை தமிழக அரசு வழங்கி வருகிறது. பிளாஸ்டிக் ஒழிப்புக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். 6200 மெவா வாட்ஸ் மின்உற்பத்திக்கான திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இதன் மூலம் மின்மிகை மாநிலமாக தமிழகம் திகழும். கோவைக்கு மெட்ரோ ரயில் கொண்டு வருவது குறித்து திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்தது இறுதி தீர்ப்பு அல்ல. தீர்ப்பு முழு விவரம் இன்னும் கிடைக்கவில்லை. கிடைத்த உடன், தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்.

மேலும், விழுப்புரம் பெரிய மாவட்டமாக இருப்பதால், தனி மாவட்டமாக பிரிக்கப்படுகிறது. கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும். மாவட்ட கலெக்டர் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here