பெண்கள் இப்படித்தான் ஆண்களை கவிழ்க்கிறார்களாம்!

காதலையும் அன்பையும் திருமண உறவையும் புதுப்பித்துக் கொண்டு, இனிமையாக வாழ பல வழிகள் இருக்கின்றன. அதில் ஆணும் பெண்ணும் பாலின வித்தியாசம் பார்க்காமல் ஒருவருக்கொருவர் ஈடுபாட்டுடன் வாழ்க்கை நடத்துவதில் தான் மகிழ்ச்சியே இருக்கிறது. அதில் ஒருவரை ஒருவர் ஈர்ப்பதற்கு சில வழிகள் உண்டு. குறிப்பாக, பெண் ஆண்களை வசீகரிக்க என்னவெல்லாம் செய்யலாம்?

உங்கள் கணவர் வர வர சரியே இல்லை. வேலை வேலை என்று எப்போதும் பிஸியாக இருக்கிறார். படுக்கையறையில் கண்டுகொள்வதே இல்லை என்று உங்களுக்குத் தோன்றினால், அவர் வேலையை முடித்துவிட்டுத் திரும்பி வருவதற்குள் உங்களை நீங்கள் முதலில் தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் ஆடையில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். கொஞ்சம் தாராளமாக, அவருக்குப் பிடித்தமான இடங்கள் பளிச்சென தெரியும்படியான உடையை உடுத்துங்கள். அதற்காக ஆபாசமான ஆடைகளை உடுத்த வேண்டும் என்று அவசியமில்லை. கணவருக்குப் பிடித்தமான, அதேசமயம் அங்க நெளிவு சுழிவுகள் தெரியும்படியாக ஆடை அணிந்து கொள்ளுங்கள். எவ்வளவு சோர்வாக வேலை முடித்து வந்தாலும் உங்கள் கவர்ச்சியான வரவேற்பு அவருக்கு பூஸ்டைத் தரும்.

நீங்கள் ஹோம்லியாக இருப்பது தான் உங்கள் கணவருக்குப் பிடிக்குமென்றால் மெல்லிய சேலையைக் கொஞ்சம் கவர்ச்சியாக உடுத்திக் கொண்டு, தலைநிறைய மணக்க மணக்க மல்லிகைப்பூவைச் சூடிக்கொள்ளுங்கள். பிறகு நீங்கள் ஒன்றுமே செய்ய வேண்டாம். மல்லிகையின் மயக்கத்தில் மற்றதை உங்கள் கணவரே ஆரம்பித்துவிடுவார்.

இருவரும் உறவு கொண்டு வெகுநாட்கள் ஆகிவிட்டது. இருவரும் மாறி மாறி பிஸியாக இருப்பதாக உணர்ந்தால், நேரம் காலமெல்லாம் பார்க்காமல் உங்கள் உறவைப் பற்றிய, இதற்கு முன் நீங்கள் அனுபவித்து மகிழ்ந்த நிகழ்வை ஞாபகப்படுத்தும் படியான மெசேஜ்களை அனுப்புங்கள். எவ்வளவு டென்ஷனாக இருந்தாலும் வேலை முடிந்ததும் தனியே படித்து மகிழ்வார்கள். அப்புறம் கால்கள் தானாய் உங்களைத் தேடி வரும்.

பொறாமை எப்போதும் நம்முடைய உணர்வுகளின் வேகத்தை அதிகரிக்கவே செய்யும். அதனால் உங்கள் தோழிகளின் கணவர்களைப் பற்றி அவ்வப்போது ஏதேனும் சொல்லி வெறுப்பேத்துங்கள். அது நிச்சயம் உங்கள் உறவை பலப்படுத்தும். ஆனால் இதில் மிகுந்த கவனமும் அவசியம். சில சமயம் அது எல்லையைத் தாண்டும் போது, தேவையில்லாத மனக்கசப்புகள் உண்டாக வாய்ப்பிருக்கிறது.

அவ்வப்போது நீங்கள் மேஜிக் செய்ய வேண்டியிருக்கும். பெரிய வித்தையெல்லாம் ஒன்றுமில்லை. எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்போது, உங்கள் கணவர் எதிர்பார்க்காத நேரங்களில் ஐ லவ் யூ சொல்லுங்கள். அந்த மூன்று வார்த்தை உங்கள் உறவில் நிச்சயம் மேஜிக் செய்யும்.

உங்கள் கணவரின் பக்கமாக செல்லும்போது, உடலோடு உடலை உரசிச் செல்லுங்கள். அது நிச்சயம் அவருக்கு மூடை உண்டாக்கும். அதேசமயம் அந்த உரசல், எதேச்சையானதாக இருக்க வேண்டுமேயொழிய, நீங்கள் திட்டமிட்டு உரசுவதாகத் தெரியக்கூடாது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here