கிணற்றில் தவறி வீழ்ந்து சிறுமி உயிரிழப்பு: கிளிநொச்சியில் சம்பவம்!

கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் பாதுகாப்பற்ற கிணற்றிலிருந்து சிறுமி ஒருவரின் சடலம், நேற்று (7.1.2019) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது வீட்டில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் நீர் அள்ளச்சென்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் 10 வயதான கிளிநொச்சி பாரதி வித்தியாலய மாணவியான புவனேஸ்வரன் டிலாணி என்ற சிறுமி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநாச்சி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here