சிதறடிக்கப்பட்ட மலிங்க: நியூசிலாந்து 364/4; இலங்கையும் நல்ல ஆரம்பம்!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளிற்கிடையிலான மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை வெற்றிபெற 365 ஓட்டங்களை நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து.

வெற்றியிலக்தை விரட்டி வரும் இலங்கை, நல்ல ஆரம்பத்தை பெற்று சிறப்பாக ஆடி வருகிறது. வழக்கமான பணியில் திடீரென விக்கெட்டுக்கள் கொட்டுப்பட்டால், மீண்டும் ஒரு தோல்வியை சந்திக்கலாம். ஆனால் வெற்றிக்கு தேவையான அல்ல தொடக்கத்தை ஆரம்ப வீரர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

நாணணச்சுழற்சியில் வென்ற இலங்கை, களத்தடுப்பை தேர்வு செய்தது.

முதலில் ஆடிய நியூசிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 364 ஓட்டங்களை குவித்தது. அந்த அணியில் ரோஸ் ரெய்லரின் அபரிமதமான போர்ம் தொடர்கிறது. கடந்த பத்து இன்னிங்ஸில் 8 அரைச்சதங்கள் அடித்துள்ளார். இன்று ஒரு சதம்.

ரெய்ல் 137 ஓட்டங்களையும், ஹென்ரி நிக்கோலஸ் 80 பந்துகளில் 124 ஓட்டங்களையும், கேன் வில்லியம்ஸன் 55 ஓட்டங்களையும் பெற்றனர். நிக்கோலஸ் இறுதிவரை ஆட்டமிழக்கவில்லை.

இலங்கை கப்டன் லசித் மலிங்கதான் ஹென்ரி நிக்கோலசிடம் அதிகமாக சிக்கி சிதறியவர். அவர் 10 ஓவர்களில் 93 ஓட்டங்களை கொடுத்தார். 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பதிலளித்து ஆடிவரும் இலங்கை முதல் விக்கெட்டிற்கு 8.1 ஓவரில் 66 ஓட்டங்களை பெற்றது. தனஞ்ஜென டி சில்வா 36 ஓட்டத்தில் ஆட்மிழந்தார். தற்போது 12.4 ஓவரில் 94/1 என ஆடி வருகிறது. டிக்வெல 37, குஷல் பெரேரா 18 என ஆடி வருகிறார்கள்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here