இந்தவார ராசி பலன்கள் (06.01.2018- 12.01.2019)

சுக்கிரன், சந்திரன் அனுகூல பலன் தருவர். வாழ்வில் முன்னேற்றம் பெற புதிய வாய்ப்புகளை தேடுவீர்கள். வீடு, வாகனத்தில் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். பிள்ளைகள் தனது தகுதி திறமைகளை வளர்த்திட உதவுவீர்கள். பூர்வ சொத்தில் ஓரளவு பணவரவு கிடைக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். மனைவி கருத்திணக்கம் கொள்வார். குடும்பத்தில் மகிழ்ச்சி ஒற்றுமை நிலைத்திருக்கும். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலங்களை கவனமுடன் பாதுகாக்க வேண்டும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும். பெண்கள் தாய் வீட்டு உதவியை கேட்டுப் பெறுவர். மாணவர்கள் புதியவர்களுடன் நிதானித்து பழகவும்.

செவ்வாய், புதன், குரு, ராகு தாராள நற்பலன் தருவர். பேச்சு, செயலில் நிதானம் பின்பற்றுவீர்கள். புதியவர்களின் நட்பும் உதவியும் கிடைக்கும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். புதிய வீடு, வாகனம் திட்டமிட்டபடி வாங்கலாம். பிள்ளைகள் பிடிவாத குணங்களை தளர்த்திக் கொள்வர். மனைவியின் செயல் குறையை இதம்பதமாக சரி செய்வீர்கள். தொழிலில் வளர்ச்சி பெற கண்ணும் கருத்துமாக பணிபுரிவீர்கள். பணியாளர்கள் புதிய தொழில் நுட்பம் அறிந்து கொள்வர். பெண்கள் கணவரின் அன்பில் மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர். மாணவர்கள் நன்றாக படித்து நண்பருக்கும் உதவுவர்.

நவக்கிரகங்களில் சந்திரன் மட்டுமே ஓரளவு நற்பலன் தருவார். எவரிடமும் நிதானித்து பேசுவதால் சிரமம் அணுகாமல் தவிர்க்கலாம். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளலாம். பிள்ளைகள் பெற்றோரின் வழிகாட்டுதலை தயக்கமுடன் ஏற்றுக் கொள்வர். குடும்பத்தில் ஒற்றுமையை கவனமுடன் பாதுகாக்கவும். குலதெய்வ வழிபாடு செய்வதால் சில நன்மை வந்து சேரும். சத்தான உணவுகளை உண்பதால் ஆரோக்கியம் மேம்படும். அதிக நிபந்தனையுடன் கடன் பெற வேண்டாம். மனைவியின் பேச்சு, செயலில் குளறுபடி ஏற்படலாம். தொழிலில் உற்பத்தி விற்பனை அளவுடன் இருக்கும். பணியாளர் நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்றவும். பெண்கள் உறவினர் விவகாரத்தில் கருத்து சொல்ல வேண்டாம். மாணவர்களுக்கு படிப்பில் அதிக கவனம் வேண்டும்.

பெரும்பான்மை கிரகங்கள் அனுகூல அமர்வில் உள்ளனர். அதிர்ஷ்டகரமான பலன் உண்டாகும். சமூக நிகழ்வு மனதில் நம்பிக்கையை உருவாக்கும். பேச்சு இனிதாக அமைந்து வசீகரமாகும். புதிய வீடு, வாகனம் வாங்க அனுகூலம் உண்டு. பிள்ளைகள் புதிய விஷயங்களை அறிந்து கொள்ள உதவுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். நண்பருக்கு கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். மனைவியின் பாசம் நிறைந்த செயல் குடும்பத்தில் ஒற்றுமையை வளர்க்கும். தொழில், வியாபாரம் புதியவர்களின் ஆதரவினால் வளர்ச்சி பெறும். பணியாளர்கள் நிலுவைப்பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்றி சலுகை பெறுவர். பெண்கள் உறவினர் குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடத்த உதவுவர். மாணவர்கள் சிறப்பாக படித்து பரிசு பாராட்டு பெறுவர்.

சுக்கிரன், கேது, சந்திரனால் ஓரளவு நற்பலன் கிடைக்கும். திட்டமிட்ட பணிகளை உத்வேகமுடன் துவங்குவீர்கள். நண்பர்களின் உதவி கிடைக்கும். வெளியூர் பயணம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். பிள்ளைகளின் ஆர்வமிகு செயலில் உருவாகின்ற குளறுபடியை சரி செய்வீர்கள். செலவில் தாராளம் இருக்கும். எதிர்ப்பாளரால் வருகின்ற கெடுசெயல் பலமிழக்கும். மனைவியின் அன்பும் பாசமும் மனதில் புதிய நம்பிக்கையை தரும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியும் பணவரவும் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். பணியாளர்கள் கடமையுணர்வுடன் பணிபுரிவர். பெண்கள் உறவினர்களை உபசரித்து நன்மதிப்பு பெறுவர். மாணவர்கள் படிப்பில் புதிய பயிற்சி முறையை மேற்கொள்வர்.

சுக்கிரன், புதன், ராகு, சந்திரனால் அளப்பரிய நற்பலன் ஏற்படும். இனிய நிகழ்வுகள் உருவாகி மனதில் சந்தோஷம் கூடும். செயல்களில் அறிவாற்றல் அதிகரிக்கும். சமூகத்தில் அந்தஸ்து பெறுவீர்கள். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். பிள்ளைகள் சில விஷயங்களில் பிடிவாதம் கொள்வர். சொத்துகளின் பராமரிப்பில் நம்பகமானவர்களை பணியமர்த்தவும். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். முன்னேற்றத்திற்கான ஆலோசனைகளை மனைவி வழங்குவார். தொழில், வியாபாரம் செழித்து அதிக லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பணி இலக்கை எளிதில் பூர்த்தி செய்வர். பெண்கள் பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள் ஞாபகத்திறன் வளர்த்து படிப்பில் முன்னேறுவர்.

பெரும்பான்மை கிரகங்கள் ராஜயோக பலன் தருவர். முக்கியமான பணிகள் புதிய அணுகுமுறையால் நிறைவேறும். தம்பி, தங்கை அதிக அன்பு பாசம் கொள்வர். வாகனத்தின் பயன்பாடு அதிகரிக்கும். பிள்ளைகள் மனதில் நல்ல சிந்தனை வளரும். இஷ்டதெய்வ வழிபாடு நடத்துவீர்கள். வாழ்வின் முன்னேற்றம் கண்டு எதிரிகள் விலகுவர். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மனைவியின் அன்பு, பாசத்தில் மனம் நெகிழ்வீர்கள். தொழில், வியாபாரம் செழித்து வளர சில மாற்றம் செய்வீர்கள். பணியாளர்கள் திறம்பட பணிபுரிந்து சலுகை பெறுவர். பெண்கள் தாராள பணவரவில் புத்தாடை நகை வாங்குவர். மாணவர்கள் படிப்புடன் கலைகளும் பயில்வர்.

கேது சந்திரன் சுக்கிரனால் தாராள நன்மை வந்து சேரும். மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் கூடும். செயல்கள் முழு அளவில் வெற்றியாகும். நல்ல குணத்தால் உறவினர், நண்பர்களிடம் பாராட்டு பெறுவீர்கள். வீடு, வாகனத்தில் கூடுதல் வசதி பெற சில மாற்றம் செய்வீர்கள். பிள்ளைகள் படிப்பு, வேலையில் முன்னேற்றம் காண்பர். ஏழைக்கு உதவும் அறப்பணிகளில் ஈடுபடுவீர்கள். குலதெய்வ அருள் துணை நின்று நம்பிக்கையை வளர்க்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். மனைவி கருத்து ஒற்றுமையுடன் நடந்து கொள்வார். தொழில், வியாபாரம் செழித்து வளர அதிக வாய்ப்புகள் உருவாகும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். பெண்கள் உறவினர் குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடத்த உதவுவர். மாணவர்கள் படிப்பு தவிர பிற விவாதம் பேச வேண்டாம்.

சுக்கிரன், சந்திரனால் ஓரளவு அனுகூலம் உண்டாகும். குடும்ப நலனில் அக்கறை கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் சொந்த பணிகளில் கவனம் கொள்வர். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்ளலாம். பிள்ளைகளின் செயல்திறன் வளர இயன்ற அளவில் உதவுங்கள். நேரத்திற்கு உணவு உண்பதால் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம். பொது விவகாரங்களில் விலகுவது நல்லது. மனைவி வழி சார்ந்த உறவினர் அன்புடன் உதவுவர். தொழில் வியாபாரத்தில் அளவான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் பணியிடச்சூழல் உணர்ந்து செயல்படவும். பெண்கள் பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்க கூடாது. மாணவர்கள் படிப்பில் புதிய இலக்கை அடைய நல்வழி பிறக்கும்.

குரு, சுக்கிரன், செவ்வாய், சந்திரன் ஆதாய பலன்களை தருவர். சுற்றத்தாரின் அன்பு ஆதரவினால் மனம் நெகிழ்வீர்கள். புதிய வாகனம் வாங்குகின்ற முயற்சி நிறைவேறும். தாய்வழி உறவினர் விரும்பி சொந்தம் பாராட்டுவர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி நடந்தேறும். பிள்ளைகள் பெற்றோரின் வார்த்தையை ஏற்று நடந்து கொள்வர். பூர்வ சொத்தில் தாராள பணவரவு கிடைக்கும். எதிர்மறையான பலன் தந்த அனுபவங்களில் நல்ல மாற்றம் உருவாகும். மனைவியின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவீர்கள். வீட்டில் மகிழ்ச்சி ஒற்றுமை நிலைத்திருக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறைந்து லாபம் கூடும். பணியாளர்கள் நிர்வாகத்திடம் நற்பெயர் பெறுவர். பெண்கள் கணவரின் அன்பில் மகிழ்ச்சிகர வாழ்வு நடத்துவர். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் அடைவர்.

சூரியன், புதன், ராகு அனுகூல அமர்வில் உள்ளனர். எந்த செயலையும் பரிசீலனை செய்து தொடங்குவீர்கள். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். வாகனப்பயணம் அளவுடன் இருக்கும். பிள்ளைகளின் எண்ணமும் செயலும் நேர்மை வழியில் அமைந்திடும். வழக்கு விவகாரத்தில் சுமுக அணுகுமுறையால் நல்ல தீர்வு பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் பலம்பெறும். மனைவி வழி சார்ந்த உறவினர்களால் உதவி வந்து சேரும். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி செய்வீர்கள். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டம் பின்பற்றி நற்பெயரை பாதுகாத்திடுவர். பெண்கள் விரும்பிய பொருட்கள் வாங்கி மகிழ்வர். மாணவர்கள் கூடுதல் பயிற்சியால் படிப்பில் முன்னேறலாம்.

பெரும்பான்மை கிரகங்களால் தாராள நற்பலன் கிடைக்கும். லட்சியம் நிறைவேற்ற மன உறுதியுடன் பணிபுரிவீர்கள். உடன்பிறந்தவர்களின் உதவி கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்க அனுகூலம் உண்டு. பிள்ளைகளின் பிடிவாத சிந்தனைகளில் தளர்வு ஏற்படும். சமயோசித அணுகுமுறையால் எதிர்ப்பாளர் திகைப்படைவர். மனைவியின் பாசம் நிறைந்த அன்பில் மகிழ்வீர்கள். வெளியூர் பயணத்தில் பாதுகாப்பு தவறாமல் பின்பற்றவும். தொழிலில் உற்பத்தி விற்பனை அபரிமிதமாக இருக்கும். பணியாளர்கள் பணி இலக்கை நிறைவேற்றி சலுகையை பெறுவர். பெண்கள் பிள்ளைகளின் நலனில் கவனம் கொள்வர். மாணவர்கள் படிப்புடன் பொது அறிவிலும் மேம்படுவர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here