புஜாரா சதம்… இந்தியா வலுவான நிலையில்!

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான சிட்னி டெஸ்டில் சதம் அடித்தார் இந்தியாவின் புஜாரா. மயங்க் அகர்வால் அரைசதம் அடித்தார்.

அவுஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று டெஸ்ட் முடிவில் இந்திய அணி 2-1 என தொடரில் முன்னிலையில் உள்ளது.

இரு அணிகள் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் துவங்கியது. நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் ஆடி வருகிறது. இந்திய அணியில் லோகேஷ் ராகுல் மீண்டும் இடம் பெற்றார். இஷாந்துக்குப் பதில் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார்.

அவுஸ்திரேலிய அணியில் பின்ச், மிட்சல் மார்ஷ் நீக்கப்பட்டு, மார்னஸ், ஹேண்ட்ஸ்கோம்ப் சேர்க்கப்பட்டனர்.

இந்திய அணிக்கு மயங்க் அகர்வால், லோகேஷ் ராகுல் ஜோடி துவக்கம் கொடுத்தது. முதல் இரு டெஸ்டில் 48 ரன் மட்டும் எடுத்த ராகுல் மீண்டும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வார் என நம்பப்பட்டது.

இதற்கேற்ப ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் 2வது பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார் ராகுல். ஹேசல்வுட் ஓவரில் பவுண்டரி அடித்த ராகுல் (9), தான் சந்தித்த 6வது பந்தில் அவுட்டாகி மறுபடியும் ஏமாற்றம் தந்தார்.

அடுத்து மயங்க், புஜாரா இணைந்தனர். அவுஸ்திரேலிய வேகங்கள் பவுன்சர்களாக போட்டுத் தாக்கினர். சற்றும் மனம் தளராத மயங்க் அகர்வால், கம்மின்ஸ் பந்துகளை பவுண்டரிகளாக மாற்றினார். ஸ்டார்க் பந்தில் பவுண்டரி அடித்த இவர், டெஸ்ட் அரங்கில் இரண்டாவது முறையாக அரைசதம் எட்டினார்.

லயன் பந்துகளில் இரண்டு சிக்சர் அடித்த மயங்க் (77) அவரிடமே வீழ்ந்தார். கோஹ்லி 23, ரகானே 18 ரன்கள் மட்டும் எடுத்தனர். மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வௌிப்படுத்திய புஜாரா, டெஸ்ட் அரங்கில் 18வது சதம் எட்டினார். முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 303 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா (130), விஹாரி (39) அவுட்டாகாமல் இருந்தனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here