மைத்திரி குடும்பத்திலிருந்து அரசியலுக்குள் நுழையும் இருவர்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் குடும்பத்தில் இருந்து விரைவில் இருவர் அரசியலுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதியின் மகன் சத்துருகா விரைவில் நேரடி அரசியலுக்குள் நுழைவார் என ஜனாதிபதியின் நெருங்கிய உறவினர் வட்டத்திலிருந்த தகவல் கசிந்துள்ளதாக, கொழும்பு ஊடகங்கள் பரபரப்பாக செய்தி வெளியிட்டு வருகின்றன.

சத்துரிகா அரசியலுக்குள் நுழைவது குறித்து கடந்த பல மாதங்களாகவே திட்டமிடப்பட்டு வருகிறது. அதற்கான முன்னேற்பாடுகளும் நடந்து வந்துள்ளன. சத்துரிகாவிற்காக தனியாக ஊடக பிரிவொன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சமூக ஊடகங்களும் கையாளப்பட்டு வருகின்றன. அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் அல்லது மாகாணசபை தேர்தலில் சத்துரிகா களமிறங்கலாமென தெரிகிறது.

இதேவேளை, மைத்திரி குடும்பத்திலிருந்து அரசியலுக்கு வரும் இரண்டாவது நபர்- அவரது சகோதரர் டட்லி சிறிசேனா. அரலிய நிறுவனத்தின் உரிமையாளரான அவர் இலங்கையின் முதன்மை கோடீஸ்வரர்களில் ஒருவர். சுதந்திரக்கட்சியில் இருந்து மைத்திரி தனிமைப்படுத்தப்படுவதை தடுக்க தனது சக்தியை அவர் பிரயோகிக் ஆரம்பித்துள்ளதாகவும், அண்மை நாட்களில் அவரே இதில் நேரடியாக ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அவரும் நேரடி அரசியலுக்கு வரலாமென தகவல் வெளியாகியுள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here