பகிடிவதை கொடுமை: கிளிநொச்சி மாணவன் கழுத்தறுத்து தற்கொலை முயற்சி!


யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் கிளிநொச்சி வளாகத்தை சேர்ந்த மாணவன் ஒருவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு (28) இந்த சம்பவம் நடந்தது.

பகிடிவதை காரணமாகவே, மாணவன் இந்த விபரீத முடிவை எடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கிளிநொச்சியை சேர்ந்த இந்த பல்கலைகழக மாணவன் மூன்று நாட்களின் முன்னர் பளை வைத்தியசாலைக்கு சென்று, தனக்கு தூக்கம் வருவதில்லை என பயந்தபடி மருத்துவரிடம் கூறியதுடன், தூக்க மாத்திரையும் கோரியுள்ளார். மாத்திரைகளை வழங்கிய மருத்துவர், மீண்டும் திங்கட்கிழமை வருமாறு கூறி அனுப்பியுள்ளார்.

நேற்று மாலை, பல்கலைகழகத்தில் நடக்கும் பகிடிவதை கொடுமைகளை பற்றி தம்முடன் பேசினார் என உறவினர்கள் தெரிவித்தனர். அதன்பின்னர், அறைக்குள் சென்று தாளிட்டுவிட்டு, கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். விரைந்து செயற்பட்ட உறவினர்கள் மாணவனை மீட்டு, பளை வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர்.

அங்கிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here