அதிக பட்ஜெட்டில் தயாராகிவரும் நயன்தாரா படம்

நயன்தாரா நடித்துவரும் தெலுங்குப் படமான ‘சை ரா நரசிம்ம ரெட்டி’, அதிக பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.

சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘சை ரா நரசிம்ம ரெட்டி’. ராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்படுகிறது.

நரசிம்ம ரெட்டி வேடத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார். அவருடைய 151-வது படமான இதை, ராம் சரண் தயாரிக்கிறார். சிரஞ்சீவி ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி, சுதீப், ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ரத்னவேலு ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படம், தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தியில் உருவாகி வருகிறது. ‘பாகுபலி’க்குப் பிறகு அதிக பட்ஜெட்டில் உருவாகும் தெலுங்குப் படம் இதுதான் என்கிறார்கள். 240 கோடி ரூபாயில் இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here