காட்டு காட்டென காட்டும் நியூசிலாந்து: ஆபத்தான கட்டத்தில் இலங்கை!


கிரைஸ்ட் சேர்ச்சில் டெஸ்ட்டில் இலங்கை வழக்கம் போல, தோல்வி அபாயத்தை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளது. இலங்கையின் முதல் இன்னிங்ஸை 101 ஓட்டங்களில் முடித்து வைத்த நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் 1 விக்கெட்டை மாத்திரம் இழந்து 138 ஓட்டங்களை பெற்றுள்ளது.

நேற்றைய முதல்நாள் ஆட்டத்தில் நியூசிலாந்தை 178 ஓட்டங்களிற் மட்டுப்படுத்திய இலங்கை, நாள் முடிவில் 66 ஓட்டங்களிற்கு 4 விக்கெட் என தத்தளித்து வந்தது.

இலங்கை சார்பில் அஞ்சலோ மத்யூஸ் மட்டும் அதிகபட்சமாக 33 ஓட்டங்களை பெற்றார். ரெஷேன் சில்வா 21, மெண்டிஸ் 15, உதிரிகள் 10 என்பதுதான் இலங்கையின் ஸ்கோர். எட்டு வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். கடைசி வீரர்களும்- டில்ருவான் பெரேரா, சுரங்க லக்மல், துஷ்மந்த சமீர, சார்ள்ஸ் குமார ஆகியோர் டக் அவுட் ஆகினர்.

போல்ட் 30 ஓட்டங்களிற்கு 6 விக்கெட்டுக்களையும், டிம் சவுத்தி 35 ஓட்டங்களிற்கு 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

தற்போது இரண்டாவது இன்னிங்சை ஆடிவரும் நியூசிலாந்து 1 விக்கெட் இழப்பிற்கு 152 ஓட்டங்களை பெற்றுள்ளது. ரவல் 74 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

தற்போது வரை நியூசிலாந்து 226 ஓட்டங்கள் முன்னிலை வகிக்கிறது. இன்றைய இரண்டாம் நாள் முடிவதற்கு இன்னும் 22 ஓவர்கள் மீதமுள்ளன. இன்னும் முழுதாக 3 நாட்கள் உள்ளன. இந்த நிலவரம் நிச்சயம் இலங்கைக்கு இப்போதே தோல்வி பயத்தை காட்ட ஆரம்பித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here