ஒல்லிக்குச்சி உடம்புக்காரிகளுக்கு

ஒல்லியாகவும், உயரமாகவும் கலராகவும் உள்ள பெண்கள் கோடு அல்லது பெட்டி போல் கட்டம் போட்ட ஆடைகள் பக்கம் போய்விட வேண்டாம். முடியைக் கழுத்துக்கு மேல் தூக்கி சிகை அலங்காரமும் செய்யக் கூடாது. சிறிய சருகைசாறி அல்லது நீள கோட்டில், அதாவது மார்பில் இருந்து நுனி வரை பூ வேலை செய்த பஞ்சாபி அணியவும் கூடாது. கொஞ்சம் பெரிய பூக்கள் போட்ட பளிச்சென்று மின்னும் சாறிகள் அல்லது பஞ்சாபிகள், பூ போட்ட பஞ்சாபிகள் அணிந்தால் நீங்கள் அதற்கு மிகவும் பொருத்தமாக இருப்பீர்கள்.

நீளமான, அகலமான அலங்காரமற்ற தாவணிகள் பொருத்தமான கலரில் அல்லது வெள்ளை, கருப்பு நிறங்களில் அணிந்து நீங்கள் நடந்து வந்தால் அழகு பிய்த்து கொள்ளும்.

ஒல்லியாகவும், உயரமாகவும் உள்ள கருப்பு அல்லது மாநிறமாக உள்ள பெண்கள் மிகவும் மெல்லிய கலர் ஆடைகளை தேர்வு செய்யக் கூடாது. அப்படியே தேர்ந்தெடுத்தாலும், மெல்லிய மற்றும் கடும் கலர்கள் மாறி, மாறி வருவது போல் ஆடையைத் தேர்வு செய்யலாம்.

இப்படி ஆடையைத் தேர்வு செய்யும் போது, அந்த ஆடையில் உள்ள ஏதாவது ஒரு கலரில், முடிந்தால் ஆடையில் உள்ள லைட் கலரில்மேற் சட்டையோ, துப்பட்டாவோ அணியலாம்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here