யாழ்ப்பாண பெண்களிற்கு எப்படியான ஆண்களை பிடிக்கிறது?

டேட்டிங் என்றால் உடனே காதலுக்கு முன்னே நெருங்கி பழகும் சமாச்சாரமாக பலர் கருதுகின்றனர். ஆனால், டேட்டிங் என்பது திருமணத்திற்கு முன்பு பெண் பார்க்க போவது போல, காதலுக்கு முன் பழகி பார்ப்பது. இவர்கள் நமக்கு செட் ஆவார்களா? ஆகமாட்டர்களா? என்பதை அறிவது.

டேட்டிங் கலாசாரம் வெளிநாட்டினுடையது, நமது ஊர்களில் அப்படியெல்லாம் நடப்பதில்லை என யாராவது நினைக்கிறீர்களா… நீங்கள் மிகப்பாவம். நமது பகுதிகளில் அது நடக்கிறது. உயர்தரத்தின் பின்னால் வீட்டில் இருப்பவர்களிற்குத்தான் இந்த உலகம் தெரிவதில்லை. ஆனால் உயர்கல்வி, வேலையிடங்களில் தாராளமாக டேட்டிங் சூழல் உருவாகிறது.

வடக்கு கிழக்கில் டேட்டிங்கில் முன்னிலையில் இருப்பது யாழ்ப்பாணம் என்கிறார்கள். மட்டக்களப்பு, வவுனியா அடுத்தடுத்த இடங்களில் உள்ளது.

இந்த இடங்களில் உயர்கல்வி நிலையங்கள் உள்ளதுதான் காரணம். நமது டேட்டிங்காரர்கள் வெகு நாகரிகமானவர்கள். உணவகம், ஐஸ்கிறீம் கடை, பார்க் என்றுதான் பெரும்பாலானவர்கள் டேட்டிங் செல்கிறார்கள்.

சரி, இனி நம்மவர்களின் டேட்டிங் தகவலொன்றிற்கு செல்வோம்.

டேட்டிங் செய்ய விருப்பமாக இருந்தாலும், ஆண்களில் சில வகையானவர்களை டேட் செய்ய பெண்களுக்கு விருப்பம் இருப்பதில்லையாம்…

‘நான் இதுவரைக்கும் யாரை பார்த்தும் கல்யாணம் பண்ணிக்கலாம் என்று யோசிச்சதே இல்ல. உன்னை பாக்குற வரைக்கும்..’ என்று டயலாக் விடும் ஆண்களை பெண்கள் டேட்டிங் செய்ய விரும்புவதில்லை. இவர்கள் எல்லாரிடமும் இப்படி தான் கூறுவார்கள் என பெண்கள் எண்ணுகின்றனர்.

நான் எல்லோருடனும் சாதாரணமாக பழகக் கூடிய நபர், சோசியல் பேர்சன் என்ற பெயரில், உடன் இருக்கும் போதெல்லாம் யாருடனாவது போனில் பேசிக் கொண்டிருக்கும் நபருடன் டேட்டிங் போக பெண்கள் விரும்புவதில்லை.

எதற்கெடுத்தாலும் ஏதோ மத்திய வங்கி மனேஜர் பதவிக்கு நேர்முகம் நடப்பதை போல மிகவும் யோசித்து, தயங்கி தயங்கி பேசும் ஆண்களை டேட்டிங் செய்ய பெண்கள் விரும்புவதில்லை.

டேட்டிங் செய்ய வேண்டும் என்றால் அந்த ஆண் மிக ரிச்சாக இருக்க வேண்டும் என்றெல்லாம் பெண்கள் ஆசைப்படுவதில்லை. டேட்டிங் என்பது பார்த்ததும் பழகி பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் நபராக இருக்க வேண்டும் என்கின்றனர் பெண்கள்.

பணிவான ஆண்களை பெண்களுக்கு பிடிக்கும். ஆனால், அதற்காக எல்லாவற்றுக்கும் அடங்கி போகும் ஆண்களை பெண்கள் நேசிப்பதில்லை. கோபப்பட வேண்டிய இடத்தில் கோபப்பட வேண்டும், ஆண் ஆணாக நடந்துக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

தான் இதையெல்லாம் சாதித்துள்ளேன், நான் இதை எல்லாம் வென்றுள்ளேன் என தற்பெருமை அடிக்கும் ஆண்களை டேட்டிங் செய்ய பெண்கள் விரும்புவதில்லை. இவர்கள் பெண்களை தங்களுக்கு கீழ் இருக்கும்படி பார்ப்பார்கள் என பெண்கள் கூறுகின்றனர். எனவே இத்தகைய ஆண்களுடன் டேட்டிங் போக பெண்கள் விரும்புவதில்லை.

எல்லாவற்றிலும் கணக்கு பார்த்து ஒரு ப்ரோக்ராம் செய்த கணினி போல வாழ்க்கை நடத்தும் ஆண்களை டேட் செய்ய பெண்கள் விரும்புவதில்லை. இவர்கள் பணத்தை மட்டும் தான் பார்ப்பார்கள், சந்தோசமாக இருக்க மாட்டார்கள் என பெண்கள் கூறுகின்றனர்.

அப்படியானால் எப்படியானவர்களைத்தான் பெண்கள் விரும்புகிறார்கள் என தலையை உடைக்காமல், வெகு இயல்பாக, நீங்களாக இருங்கள்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here