காலையிலே சிகரெட்டா?

போதைக்கு அடிமையான உலகம் இது. இளைஞர்களின் மோகம் இன்று சிகரெட் தான். சிகரெட் புகைப்பது ஸ்ரைல் என்று ஆரம்பிக்கும் எமது இளைஞர்கள் நிக்கோட்டினின் நிற்பாட்ட முடியாத போதை பழக்கத்தால் தொடர்ந்தும் அடிமையாகி விடுகின்றார்கள். ஒரு நாளுக்கு ஒன்றா இரண்டா? அடிக்கடி புகைக்கும் பழக்கமுடைய இளைஞர்கள் புகைத்தலிற்கு அடிமையாகி உயிரையும் விடும் நிலைக்கு செல்கிறார்கள்.

இப்படி இருக்கையில் சில இளைஞர்கள் காலையிலே எழுந்து ரீ குடிக்கும் முன்னரே சிகரெட் புகைக்க ஆரம்பிக்கின்றனர். சாப்பிடுவதற்கு பணம் இல்லாவிட்டாலும் சிகரெட் புகைப்பதற்கு பணம் இல்லையென்றதும் பைத்தியம் பிடித்தவர்கள் போல் கோபம் கொதிக்க திரியும் ஆண்களை பார்க்கும் பொழுது பரிதாபமாக இருக்கும்.
பலம் மிக்க மனிதனை அடிமையாக்கி விடும் நிக்கோட்டின் ஏற்படுத்தும் விளைவுகள் சாதாரணமானதல்ல. ஒரு மனிதனை பைத்தியமாக்கும். உயிரை பறிக்கும். கடன்காரனாக்கும். இப்படி மனிதனின் அழிவில் முதலிடம் வகிக்கின்றது சிகரெட். எனவே சிகரெட் குடிப்பதை பழக்கபடுத்துவதையே வளர்ந்து வரும் சமூகம் தவிர்க்க வேண்டும்.

ஏற்கனவே பழக்கப்பட்டுள்ளவர்கள் குறைந்தது காலையில் சிகரெட் புகைக்கும் பழக்கத்தையாவது தவிர்த்துவிட வேண்டும். அதையும் மீறி காலையில் புகைத்தால் என்ன நடக்கும்?

காலையில் எழுந்தவுடன் புகை பிடிப்பது என்பது மரணத்தை விரைவில் வரவழைக்கும் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள்.

இது தொடர்பாக அமெரிக்க மருத்துவக் கல்லூரி ஒன்று நடத்திய ஆராய்ச்சியில், காலையில் எழுந்ததும் புகை பிடிப்பதினால் நுரையீரல், கழுத்து மற்றும் தலையில் புற்று நோய் வருவதற்கான ஆபத்து மிக அதிகமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களில் பலர், காலையில் எழுந்ததுமே கழிவறைக்குள் புகுந்துகொள்வார்கள். உள்ளே போய் ஒரு சிகரெட்டை பற்ற வைத்தால்தான் அவர்களுக்கு காலைக்கடனே கழியும். சிலர் இதனை பெருமையாக வேறு கூறிக்கொள்வார்கள்.

அத்தகைய பீற்றல்காரர்களுக்குத்தான் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர் மேற்கூறிய மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சியாளர்கள்.

இவ்வாறு காலையில் எழுந்ததும் புகைபிடிப்பவர்களது உடலில் நிகோடின் மற்றும் இதர புகையிலை நச்சுகள், மற்ற நேரங்களில் புகை பிடிப்பவர்களை விடஅதிகமாக காணப்படுகின்றன. அத்துடன் புகை பிடிக்கும் மற்றவர்களை விட இவர்கள் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு மிக அதிகமாக அடிமையாக உள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

நுரையீரல் புற்றுநோய் பாதித்த 4,775 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், அவர்கள் அனைவருமே காலையில் எழுந்ததும் சிகரெட் புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களென்பது தெரியவந்துள்ளது.

இதேபோன்றுதான் தலை மற்றும் கழுத்தில் புற்றுநோய் தாக்கியவர்களுக்கும், மற்ற நேரங்களில் அதாவது காலையில் எழுந்து ஒரிரு மணி நேரம் கழித்து புகை பிடிப்பவர்களைக் காட்டிலும் அதிக நோய் தாக்கம் இருப்பது தெரியவந்துள்ளது.
மொத்தத்தில்,சிகரெட் பிடிப்பதே உடல் நலத்திற்கு கேடு என்று இருக்கும்போது, காலையில் எழுந்தவுடன் மட்டுமல்லாது நிரந்தரமாகவே புகைபிடிப்பதை கைவிட்டுவிடலாமே!

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here