ஜெயலலிதா மரண விவகாரம்: விசாரணைகள் இறுதி கட்டத்தில்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான, ஆறுமுகசாமி ஆணைய விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு,  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் ஆறுமுகசாமி ஆணையம் இன்று விசாரிக்கிறது .

மேலும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் இறுதி கட்ட விசாரணைக்காக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ஜெயயலிதா மரணமானது டிசெம்பர் 5 ஆம் திகதியா அல்லது 4 ஆம் திகதி என்ற சந்தேகம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது.

அவரின் மரணம் திட்டமிட்ட கொலை என்றும தகவல்கள் கசிந்து பல்வேற மனுக்கள் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் அவரின் மரணம் தொடர்பில் உண்மையை கண்டறயவென்று தமிழக அரசு,  ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை குழுவொன்றை அமைத்தது.

கிட்டத்தட்ட ஒரு வருடங்களாக விசாரணையை முன்னெடுத்துவரும் இவ்விசாரணைக்குழுவின் காலம் முடிவடையும் நிலையில் இறுதிக்கட்ட விசாரணைகள் இடம்பெற்று வருகிறம குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here