டுபாய் எண்ணெய் நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞன் தூக்கிட்டு தற்கொலை!

டுபாய் எண்ணெய் நிறுவனத்தில் பணியாற்றும் இளைஞர் குடும்ப பிரச்சனை காரணமாக தி.நகர் தனியார் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

பெரம்பூரைச் சேர்ந்தவர் குருநாதன். இவரது மகன் அருண்குமார் இருவரும் டுபாயில் உள்ளனர். அங்குள்ள எண்ணெய்க் நிறுவனத்தில் அருண்குமார் பணியாற்றிவந்தார்.

அருண்குமாரின் தாயார் அவரது அண்ணனுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அருண் குமாருக்கு திருமணத்திற்கு பெண் பார்த்து வந்தனர்.

சென்னையில் அவருக்கு வித்யா என்கிற பெண்ணைப்பார்த்து நிச்சயித்தனர். நான்கு மாதத்திற்கு முன் திருமணத்திற்காக அருண்குமார் சென்னை வந்தார். பின்னர் ஒருமாதம் கழித்து வித்யாவுடன் திருமணம் நடந்தது. சந்தோஷமாக திருமணவாழ்வு சென்றது.

இந் நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 15 நாட்களுக்கு முன் இருவரும் பிரிந்துவிட்டனர். இதையடுத்து மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அருண்குமார்  தி.நகர் கோட்ஸ் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் 10 ஆம் திகதி வரை தங்கியிருந்தார்.

நேற்று முன் தினம் இரவு அறைக்கு தூங்க சென்றவர் நேற்று மதியம் வரை கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் பாண்டிபசார் பொலிஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்ததன் பேரில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து  கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

உள்ளே பெட்ஷீட்டால் மின் விசிறி கொக்கியில் தூக்கிட்ட நிலையில் பிணமாக தொங்கியபடி கிடந்தார். அவர் உடலை கீழே இறக்கி பிரேத பரிசோதனைக்காக கஸ்தூரிபாய் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது தற்கொலை குறித்து அமெரிக்காவில் உள்ள அவரது தாயாருக்கும், சகோதரருக்கும், துபாயில் உள்ள தந்தைக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here