அம்பானி மகள் திருமணத்தில் அசத்திய இலங்கை நடனக்குழு!


இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகளின் திருமணம் சில நாட்களின் முன்னர் நடைபெற்றது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர்கள் ஹிலாரி கிளிங்டன், ஜோன் கெரி உள்ளிட்ட உலகளவில் பரபலமான ஏராளமானவர்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

உலக மகா கோடீஸ்வரரின் மகளுடைய திருமணம் என்றால், பணத்தை தாராளமாக வாரியிறைத்திருக்க மாட்டார்களா?

இறைத்தார்கள். அலங்காரம், கண்கவர் நடனங்கள் என ஒரு மெஹா கொண்டாட்டத்தையே நிகழ்த்தி முடித்திருக்கிறது அம்பானி குடும்பம். திருமண நிகழவில் இடம்பெற்ற நடனங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியிருந்தது.

இதில் விசேசம் என்னவென்றால், அம்பானி மகள் திருமணத்தில் இலங்கை நடனக்குழுவொன்றும் கலந்து கொண்டிருக்கிறது. இலங்கையின் பிரபல நடன கலைஞரான சந்தான விக்ரமசிங்கவின் நடனக்குழுவே இதில் கலந்து கொண்டிருந்தது. இவர்கள் இரண்டு நடன நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கை பாரம்பரிய முறை நடனங்களையே இந்த குழு அம்பானி மகள் திருமணத்தில் நிகழ்த்தியிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here