மஹிந்தவின் மனுவை ஐந்து நீதியரசர் ஆயத்தில் விசாரிக்க கோரி ரணில் மனு!

பிரதமர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்களை அந்த பதவியில் கடமையாற்ற விடாது விடுக்கப்பட்டுள்ள இடைக்கால தடை உத்தரவை நீக்குமாறு மஹிந்த ராஜபக்ஷ தரப்பு தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை ஐந்து நீதியரசர்களை கொண்ட ஆயத்தில் விசாரணை செய்யுமாறு கோரி, உயர்நீதிமன்றத்தில் இன்று ஐ.தே.க மனு தாக்கல் செய்துள்ளது.

ரணில் விக்ரமசிங்கவின் சட்டத்தரணி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ உட்பட முன்னாள் அமைச்சரவை உறுப்பினர்கள் 17 பேரினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு நேற்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, வழக்கை 14 ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கின் பிரதிவாதிகளாக ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் 122 உறுப்பினர்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

தங்களுடைய பதவியில் கடமையாற்ற விடாது மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தர அரசியலமைப்பிற்கு விரோதமானது என குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான ஒரு தீர்ப்பை வழங்க மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு எவ்வித அதிகாரமும் இல்லை எனவும் குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here