சுமந்திரனை எப்படி சமாளிப்பது?: மைத்திரியுடன் ரூம் போட்டு யோசிக்கவுள்ளது மஹிந்த அணி!


தற்போதைய அரசியல் நெருக்கடி நிலைமை குறித்து ஜனாதிபதியுடன் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இன்று பொதுஜன பெரமுன நடத்துவுள்ளது.

விஜேராமவிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த விமல் வீரவன்ச இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்- “ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுமந்திரனின் சூழ்ச்சிகளின் மூலம் ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளது.

இவர்கள் அரச சார்பற்ற நிறுவனங்களிற்கும், சர்வதேச நாடுகளிற்கும் தேவையான விதத்தில் செயற்படுகிறார்கள். இதனாலேயே ஜனாதிபதியை கொலை செய்வது தொடர்பாகவும் பேசப்பட்டது. இதனால், அவர்களின் சூழ்ச்சிகளை முறியடிப்பது தொடர்பில் ஆராயவுள்ளோம்“ என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here