‘போர் அடித்தால் போர்ன் பிலிம் பார்ப்பேன்… அஜித்தில் ஆசை’: மீண்டும் பரபரப்பை கிளப்பும் ஸ்ரீரெட்டி!

‘ஸ்ரீலீக்ஸ்’ மூலம் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டிக்கு அட்டிமேட் ஸ்டார் அஜித்துடன் டேட்டிங் செய்ய வேண்டும் என்ற ஆசை இருப்பதாக கூறியுள்ளார்.

தெலுங்கு திரையுலகில் திரைப்பட வாய்ப்பு கேட்கும் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாக குற்றம்சாட்டிய நடிகை ஸ்ரீரெட்டி, தெலுங்கு நடிகர்கள் சங்கத்தின் முன் அரை நிர்வாண போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.

தொடர்ந்து, தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி பிரபலங்கள் மீது பாலியல் புகார்களை அடுக்கி தென்னிந்திய சினிமாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தினார்.

தற்போது ஸ்ரீரெட்டி புகார் கூறிய பிரபலங்களில் ஒருவரான நடிகர் ராகவா லாரன்ஸின் அடுத்தப் படத்தில் நடிக்க ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஹைதராபாத்தில் இருந்து தற்போது சென்னைகு குடியேறியுள்ள ஸ்ரீரெட்டி, சமீபத்தில் யூடியூப் சனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

அந்த பேட்டியில், தன்னை பற்றிய பல சுவாரஸ்யங்களை பகிர்ந்துக் கொண்ட ஸ்ரீரெட்டி, தல அஜித்தை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், அவருடன் டேட்டிங் செய்ய வேண்டும் என்ற ஆசை இருப்பதாகவும் கூறியுள்ளார். “அஜித் தான் சூப்பர் அதனால் தான் அவருடன் டேட்டிங் செய்ய விரும்புகிறேன்“ என்றும் அவர் கூறியுள்ளார்.

சன்னி லியோன், கிம் கர்தாஷியான், ஏஞ்சலினா ஜூலி, நயன்தாரா, அனுஷ்கா ஆகிய நடிகைகள் மீது தனக்கு ஈர்ப்பு உள்ளதாக கூறிய அவர், போர் அடிக்கும் போதெல்லாம் ஆபாசப் படம் பார்ப்பது வழக்கம் என கூறினார். தனது 15 வயதில் கன்னித்தன்மையை இழந்ததாகவும், எனது அப்பாவிடம் சிக்கி தர்ம அடி வாங்கியதாகவும் ஸ்ரீரெட்டி பகிர்ந்துக் கொண்டார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here