இளங்கலைஞர்களை ஊக்குவிக்கும் கலாசார சிகிச்சை முகாம்

இளங்கலைஞர்களை ஊக்குவிக்கும் கலாசார சிகிச்சை முகாம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில்
நடைபெற்றது. இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் கே.விமலநாதன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இப்பயிற்சி நிகழ்வுக்கு அம்பாறை மாவட்டத்திலுள்ள 13 தமிழ் மொழி மூல பிரதேச செயலகங்களில் இருந்து 18-35 வயதுக்கு உட்பட்ட 300 இளங்கலைஞர்கள் கலந்து கொண்டார்கள். இவர்களுக்கு இசை, நாடகம், நடனம், புகைப்படம், ஓவியம், வானொலி, இலக்கியத்தில் கட்டுரை, விவரணம், கவிதை என பத்து துறையிலும் தேர்ச்சி பெற்ற வளவாளர்களைக் கொண்டு ஒவ்வொரு துறை சார்ந்தவர்களுக்கும் தனிப்பட்ட பயிற்சி வழங்கப்பட்டதுடன் பயிற்சி முடிவில் அரச அங்கீகாரம் கொண்ட சான்றிதலும் வழங்கப்பட்டது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here