கல்முனை மாநகரசபை: வரவு செலவு திட்டத்திற்கு திட்ட முன்மொழிவுகளை சமர்பிப்பித்தது நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

கல்முனை மாநகர சபை நிருவாகம் 2019ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட தயாரிப்புக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது. இவ் வரவு செலவு திட்டத்திற்கான திட்ட முன்மொழிவுகளை மாநகர சபை உறுப்பினர்களிடம் மாநகரசபை நிருவாகம் கோரியிருந்தது. அதற்கமைவாக கல்முனை மாநகர சபையில் அங்கம் வகிக்கும் NFGG உறுப்பினர் A.G.முஹம்மட் நதீர் மெளலவி நேற்று (07) வெள்ளிக்கிழமை வரவு செலவு திட்டத்துக்கான முன்மொழிவுகளை கல்முனை மாநகர சபை செயலாளர் M.I.பிர்னாஸிடம் கையளித்தார்.

இத்திட்ட முன்மொழிவில் நோய்த்தடுப்புச் சேவைகள், வடிகாண்கள் மற்றும் வீதிகள் துப்பரவு, மாதர் மற்றும் சிசு பரிபாலனம், சுகாதார மேம்பாட்டு வேலைத்திட்டம், திண்மக் கழிவு சேகரிப்பு, வீதிகள், வடிகான்கள், மற்றும் பாலங்கள், தெருமின்விளக்குகள், நூலக அபிவித்தி, சன சமூக நிலையங்கள், பொதுப் பொழுது போக்கு வசதிகள், பொது உதவிகள், தொழில் முன்னிலை வழிகாட்டல்கள், சிறுவர் பாடசலைகள், சமூக ஒழுக்கத்தை கட்டியெழுப்புதல் மற்றும் போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்தல், சுத்தமான குடிநீர் விநியோகம், மத கலாச்சாரங்களையும், பிரதேச கலாச்சாரங்களையும் கட்டியெழுப்புதல் மற்றும் பாடசாலைக் கல்வி அபிவிருத்தி மற்றும் சமூக நலனோம்பல் ஆகிய தலைப்புக்களின் கீழான திட்ட முன்மொழிவுகளை நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் உறுப்பினர் முன்வைத்துள்ளார்.

மேற்படி இவ்விடயங்களை கவனத்திற் கொண்டு 2019ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்திற்கூடாக சிறந்த திட்டமிடல் ஒன்றினைத் தயாரிக்குமாறு NFGG கல்முனை மாநகர சபை உறுப்பினர் கோரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here