‘அஸ்தானா லஞ்சம் வாங்கியதை நிரூபிக்கும் ஆதாரம் சிக்கியது’

சி.பி.ஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் மிக முக்கியமான ஆதாரம் கிடைத்துள்ளதாக, டில்லி உயர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ இயக்குனர் அலோக் வர்மா கூறியுள்ளார்.

சி.பி.ஐ இயக்குனர் அலோக் வர்மா, சி.பி.ஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இடையே அதிகார மோதல் ஏற்பட்டதை அடுத்து, இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் புகார்களை கூறினர்.

இதையடுத்து, இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். தன்னிடம் பொறுப்புகள் பறிக்கப்பட்டதை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தில் அலோக் வர்மா வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில், டில்லி உயர் நீதிமன்றத்தில் அலோக் வர்மா சார்பில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

சி.பி.ஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீதான புகார்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதில், அவர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் மிக முக்கியமான ஆதாரம் கிடைத்துள்ளது.

இந்த ஆதாரம் அஸ்தானா லஞ்சம் வாங்குவதை உறுதி செய்யும் வகையில் உள்ளது. அஸ்தானாவுக்கு எதிராக எப்.ஐ.ஆர் எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய அரசின் ஒப்புதல் தேவையில்லை.

அஸ்தானாவின் செயல்பாட்டால் பறிபோன மக்கள் நம்பிக்கையை மீண்டும் பெற, அவர் மீதான புகார்கள் குறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அஸ்தானா மற்றும் அவர் கூட்டாளிகள் மீதான குற்றச்சாட்டுகள்
மிக மோசமானவை. அவற்றை தீர விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here