‘ஹுவாவேய்’ அதிபரின் மகள் கைது: சீனா சீற்றம்!

சீனாவின் பிரபல ஹுவாவேய் தொலைத் தொடர்பு நிறுவன அதிபரின் மகள் கனடாவில் கைது செய்யப் பட்டு அவர் அமெரிக்காவிக்கு நாடு கடத்தப்படுகிறார். இந்த நடவடிக்கை சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவை சேர்ந்த பிரபல பன்னாட்டு தொலைத் தொடர்பு நிறுவனம் ஹுவாவேய். இந்த நிறுவன அதிபர் ரென் ஜெங்பெய். அவரது மகள் மெங் வான் ஜவ். இவர் அந்நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரி ஆவார். இவர் கனடாவில் வான்கூவர் நகரில் இம்மாதத் தொடக்கத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதுபற்றிய தகவலை இப்போது தான் நீதித் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அவரை தங்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு அமெரிக்கா கேட்டு கொண்டுள்ளது. எனவே அவர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுகிறார். அதே நேரத்தில் அவர் எதற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்பது பற்றிய கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை. இருப்பினும் இது சீனாவுக்கு அமெரிக்கா மீது கடும் எரிச்சலை மூட்டியுள்ளது.

ஏற்கனவே அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் பனிப்போர் நிலவி வந்தது. இது வர்த்தகப் போராக மாறியது. இது உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் ஹுவேவேய் நிறுவன உயர் அதிகாரி கைது செய்யப்பட்டிருப்பது இரு தரப்பு உறகளில் மேலும் உரசலை உருவாக்கும் எனக் கூறப் படுகிறது. கனடாவின் ஒட்டவோ நகரில் உள்ள சீனத் தூதரகம் உடனடியாக மெங் வான் ஜவ்வை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியது.

இத்தகைய கைது நடவடிக்கையை கடுமையாக எதிர்ப்பதாகவும் இது மனித உரிமையை மிக மோசமாக பாதிப்பதாக அமைந்து உள்ளதாகவும் சீனத் தூதரகம் கூறியுள்ளது.

ஈரான் மீதும் வடகொரியா மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது தொடர்பில் இத்தடைகளை ஹுவாவேய் நிறுவனம் மீறியதாக கூறி அமெரிக்கா விசாரணை நடத்தி வருகிறது. இந்த அடிப்படையில் தான் ஹுவாவேய் நிறுவன அதிபரின் மகள் கைது செய்யப்பட்டுள்ளார் என நம்பப்படுகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here