காத்தான்குடியில் ஆர்ப்பாட்டம்!

உடனடியாக நாடாளுமன்ற தேர்தலை நடத்தி ஸ்திரமான அரசாங்கம் ஒன்றை அமைக்குமாறு கோரி காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் மீரா ஜும்ஆ பள்ளிவாயலின் ஜூம்மா தொழுகையை தொடர்ந்து பள்ளிவாயலின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

காத்தான்குடி ஜனநாயகத்துக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், உடனடியாக நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்பதை வழியுறுத்தி பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here