பவர் ஸ்டாரை காணவில்லை: மனைவி புகார்!

காமெடி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை என்று அவரது மனைவி போலீசில் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொந்த காசில் ஹீரோவாக படம் தயாரித்துக் கொண்டிருந்த பவர் ஸ்டார் சீனிவாசன், சந்தானத்தின் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதன் பிறகு, மற்றவர்களிடம் காசு வாங்கிக்கொண்டு நடித்தார்.

அதன்பின் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வந்த நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், அவ்வபோது மோசடி வழக்கில் சிறைக்கும் சென்று வந்தார்.

இந்த நிலையில், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனின் மனைவி ஜூலி, அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், நண்பரை பார்க்க சென்ற பவர் ஸ்டார் சீனிவாசன் வீடு திரும்பவில்லை. அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here