சினிமா வேண்டாம்: தமிழக அழகி அதிரடி!

ஐஸ்வர்யா ராயை போல உலக அழகி பட்டம் வென்றவராகட்டும், கஸ்தூரியை போல உள்ளூர் அழகி பட்டம் வென்றவராக இருக்கட்டும், பட்டம் வாங்கிய மறுகனமே சமூகசேவையில் ஈடுபட போவதாக கூறிவிட்டு, வெள்ளித்திரையில் ஹீரோயினாக ஜொலிக்க தொடங்கிவிடுவார்கள். அந்த வகையில் தமிழ் மற்றும் இந்திய சினிமாவில் அழகி போட்டியில் பட்டம் வென்ற பலர் நடிகைகளாகி விட்டனர்.

ஆனால், அப்படி ஒரு அழகி போட்டியில் பட்டம் வெற பெண் ஒருவர், சினிமா வேண்டாம், என்று அதிரடியாக கூறியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற ‘மிஸ்சஸ்.இந்தியா யூனிவர்ஸ்’ போட்டியில் தமிழகத்தை சேர்ந்த சம்யுக்தா பிரேம் ‘மிஸ்சஸ்.இந்தியா யூனிவர்ஸ் கிளோப் 2018’ பட்டத்தை வென்றிருக்கிறார். 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ‘மிஸ்சஸ்.இந்தியா’ போட்டியில் 6 வது இடம் பிடித்த சம்யுக்தா, ‘மிஸ்சஸ்.இந்தியா யூனிவர்ஸ்’ போட்டியில் பங்கேற்று, அதற்கான சில மாதங்களாக தன்னை தயாரிப்படுத்தி வந்தார். உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு மற்றும் இன்றி கலாச்சாரம், அறிவுத்திறன் உள்ளிட்ட பல கட்ட தேர்வுகளில் வெற்றிபெற்றவர் இறுதியாக ‘மிஸ்சஸ்.இந்தியா யூனிவர்ஸ் கிளோப் 2018’ பட்டத்தை வென்றிருக்கிறார்.

இந்தியா முழுவதும் இருந்து 52 பேர்கள் கலந்து கொண்ட இந்த போட்டியில் தமிழகம் சார்பில் வெற்றி பெற்ற ஒரே நபர் சம்யுக்தா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஷன் துறையில் தேர்ச்சிப் பெற்ற சம்யுக்தா, லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் பேஷன் டெக்னாலஜி படித்திருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு பேஷன் டெக்னாலாஜி பணியை தொடர்ந்துக் கொண்டிருந்த அவருக்கு, அவரது கணவர் பிரேம் அளித்த ஊக்கத்தின் பேரில் இந்த போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றிருக்கிறார்.

தான் வெற்றி பெற்றது குறித்து அறிவிப்பதற்காக சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த சம்யுக்தாவிடம், சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா? என்றதற்கு, “நிச்சயம் நடிக்க மாட்டேன். எனது பேஷன் துறையில் கவனம் செலுத்த இருக்கிறேன். எனக்கான தனி பிராண்ட் ஒன்றை உருவாக்க திட்டமிட்டிருப்பதோடு, அறக்கட்டளை ஒன்றை தொடங்கி அதன் மூலம் பல உதவிகளை செய்ய இருக்கிறேன்.” என்றார். அடுத்த ஆண்டு உலக அளவிலான திருமதி அழகிப் போட்டியில் பங்குபெறவும் முடிவு செய்துள்ளாராம்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here