3000 வேலைவாய்ப்பில் 30 ஐ கூட சிறுபான்மையினங்களிற்கு வழங்காத சஜித்!

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு கிராமிய நலன்புரி உறுப்பினராவதற்கு கூட தகுதி கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனநாயகம் பற்றி தற்போது பேசுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவின் ஊடாகவே பெரிய மோசடிகள் இடம் பெற்றுள்ளள.

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களை விளம்பரப்படுத்துவதற்காகவே பத்து மாத காலத்திற்குள் 3000 இலட்சம் நிதி செலவிடப்பட்டுள்ளது.

மக்களின் வரிப்பணத்தினை தனது அமைச்சின் பணிகளின் விளம்பரத்திற்காக பயன்படுத்தும் எவ்வித அதிகாரங்களும் இவருக்கு கிடையாது என்றார்.

இதேவேளை, வீடமைப்பு அமைச்சராக சஜித் பிரேமதாச பதவியேற்றதன் பின்னர் வழங்கப்பட்ட 3,000 வேலைவாய்ப்பையும் ஹம்பாந்தோட்ட மாவட்டத்தில் மாத்திரம் வழங்கினார் என்றும், சிறுபான்மையினரான தமிழ் மற்றும் முஸ்லிம்களின் எண்ணிக்கை இதில் கூட கிடையாதென்றும் விமர்சனம் எழுந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here