அரச நிகழ்வுகள் அரச இடங்களிலேயே!

அரச நிகழ்வுகள் மற்றும் கூட்டங்கள் அரசாங்கத்துடன் ​தொடர்புடைய கேட்போர் கூடங்கள் மற்றும் நிறுவனங்களில் மட்டும் நடத்தப்பட வேண்டும் என அனைத்து அரசாங்க அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், நியாயாதிக்க சபைகள் உள்ளிட்ட அனைத்து அரச நிறுவனங்களும் தங்களது நிறுவனத்தின் வைபவங்கள், கூட்டங்கள் மற்றும் ஏனைய நிகழ்ச்சிகளை நடாத்துவதற்கு தனியார் ஹோட்டல்களை, விஷேடமாக அதிசொகுசு ஹோட்டல்களை பயன்படுத்துவது முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.​

ஜனாதிபதியின் அறிவுரையின் அடிப்படையில் இன்று அரசாங்கம் புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தினை அனைத்து அரசாங்க அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளது.

இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அரசாங்கத்தின் கீழ் இயங்கும் கேட்போர் கூடங்கள் மற்றும் நிறுவனங்கள் பல காணப்படும் நிலையில் அவற்றை உபயோகிக்காது அதிகளவான கட்டணங்களை செலுத்தி அரச வைபவங்களையும் நிகழ்ச்சிகளையும் அதிசொகுசு ஹோட்டல்களில் நடத்துவதன் மூலம் ஏற்படும் வீண் செலவினை தடுப்பதற்காகவும் அரச செலவினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகவும் ஜனாதிபதியால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றையதினம் கொழும்பு சங்கரில்லா நட்சத்திர விடுதியில், சுற்றுலா அதிகாரசபையின் நிகழ்வொன்றில் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்தார். அந்த நிகழ்வை முக்கிய நட்சத்திர விடுதி உரிமையாளர்கள் பலர் புறக்கணித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here