உயர்நீதிமன்றம்: நான்காம் நாள் விசாரணைகள் ஆரம்பம்!

நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று (07) நான்காவது நாளாக மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

04 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் விசாரணைகளின் இறுதிநாள் இன்றாகும்.

பிரதம நீதியரசர் நளின் பெரேரா உள்ளிட்ட பிரியந்த ஜெயவர்த்தன, பிரசன்ன ஜயவர்தன, சிசிர டி ஆப்ரு, விஜித் மாலல்கொட, புவனேக அலுவிஹாரே மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய ஏழு நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.

ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய அரசியல் கட்சிகள் உட்பட பதின்மூன்று தரப்பினர் குறித்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

4,5ம் திகதிகளில் வழக்கு விசரணைகள் இடம்பெற்று, இன்று (7) தீர்ப்பு வழங்கப்படுமென முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இன்றுவரை வழக்கு விசாரணைகள் நீடிக்கப்பட்டதாக நேற்று உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here