பிளாஸ்ரிக் தொழிற்சாலையில் விபத்து- 4 பேர் உயிரிழப்பு: 44 பேர் படுகாயம்!

டொமினிகன் குடியரசின் தலைநகரில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் தொழிற்சாலையில் உள்ள வெப்பமேற்றியொன்று வெடித்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு 44 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக தொழிற்சாலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அருகில் உள்ள பாடசாலை வளாகத்திற்கும் தீ பரவியது.

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். பாடசாலை சிறார்கள் உள்ளிட்ட 45 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

எரிவாயு கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here