ஈரானில் தற்கொலை குண்டு தாக்குதல் மூன்று பொலிஸார் உயிரிழப்பு!

ஈரானின் பொலிஸ் தலைமையகம் அருகே இடம்பெற்ற தற்கொலைப்படைத் தாக்குதலில் 3 பொலிஸார் உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

சபாஹர் துறைமுக நகரில்உள்ள பொலிஸ் தலைமையகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரிலிருந்த நபர் திடீரென காரை வெடிக்க வைத்துள்ளார்.

இந்த தாக்குதலில் 3 பொலிஸார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அத்தோடு 20 க்கும் அதிகமானோர் படுகாயமுற்றனர்.

பொலிஸ் உயர் அதிகாரிகளைக் குறிவைத்து இந்த தற்கொலைப்படைத் தாக்குதல் அரங்கேற்றப்பட்டிருப்பதாக ஈரான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here