2015இல் கைவிட்டவற்றை மீண்டும் கையிலெடுத்த மஹிந்த: மந்திர வஸ்துக்களாவது அவரை காப்பாற்றுமா?

மஹிந்த ராஜபக்ச எம்.பியின் கையில் புதிதாக தோன்றியுள்ள மந்திர வஸ்து ஒன்று அண்மையில் புகைப்படப்பிடிப்பாளர்களின் கமராவில் சிக்கியுள்ளது.

கடந்த சில நாட்களாகத்தான் மஹிந்த ராஜபக்சவின் கையில் இந்த மந்திர வஸ்து காணப்படுகிறது.

புதிதாக பிரதமர் பதவியை ஏற்றதில் இருந்து அவருக்கு “நாளாந்தம் கண்டம்“ ஏற்பட்டு வருகிறது. அவரை பிரதமராக சர்வதேச நாடுகள் அங்கீகரிக்கவில்லை. நீதிமன்றத்தில் ஏராளம் வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றில், அவருக்கு எதிரான தீர்ப்புக்கள் வருகின்றன. நாடாளுமன்ற பெரும்பான்மை கிடைக்கவில்லை. சு.கவிற்குள்ளேயே அவருக்கு எதிரான அதிருப்தியணி உருவாகியுள்ளது. இப்படி ஏராளம் பிரச்சனைகள் தோன்றியதையடுத்து, அவரது கையில் மந்திர வஸ்து தோன்றியுள்ளது.

2015ஆம் ஆண்டு, ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைவதற்கு முன்னதாகவும் இதே போன்ற மந்திர வஸ்து ஒன்று மஹிந்த ராஜபக்சவின் கையில் தென்பட்டது. அது பிரபல மந்திரவாதியொருவரால் வழங்கப்பட்டதாக அப்போது பேசப்பட்டது. எனினும், தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், அவற்றை மஹிந்த கைவிட்டிருந்தார்.

ஒக்ரோபர் 26இல் அதிகாரத்திற்கு வந்து முதல், பிரச்சனைகளை மட்டுமே சந்தித்து வருவதையடுத்து, மஹிந்த ராஜபக்ச மீண்டும் மந்திரவஸ்துக்களை கையில் எடுத்துள்ளார்.

மந்திர வஸ்துக்களாவது மஹிந்தவை காப்பாற்றுமா?

2015 கால வஸ்து
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here