முகநுல் மூலம் பழகி கல்லூரி மாணவி உள்பட 20 பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று வாலிபர் ஜின்சு அந்த மாணவியை காரில் கல்லூரிக்கு அழைத்து சென்றார். காரில் இருந்து இறங்கிய மாணவி ஜின்சுவை பார்த்து சிரித்து கொண்டே சென்றுள்ளார்.
இதனை கல்லூரி முதல்வர் பார்த்து விட்டார். அவருக்கு வாலிபர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து அவர் கோட்டயம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அவர் சம்பந்தப்பட்ட மாணவியை அழைத்து விசாரணை நடத்தினார். மாணவியின் தொலைபேசி மூலம் பேசி ஜின்சுவை தனி இடத்திற்கு வருமாறு அழைத்தனர். அதன்படி ஜின்சு அங்கு வந்தார்.
அங்கு மறைந்து இருந்த பொலிஸார் அவரை கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது கல்லூரி மாணவி மட்டுமின்றி மேலும் 19 பெண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததை ஒத்துக் கொண்டார். அவரை கோட்டயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.