தெலுங்கானாவில் தேர்தல் வாக்கு பதிவுகள் ஆரம்பம்!

தெலுங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

தெலுங்கானாவில் முதலமைச்சர்  சந்திரசேகரராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சி நடக்கிறது.

குறிப்பாக 119 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பித்துள்ளதோடு மாலை 5 மணிக்கு முடிவடைகிறது.

நக்சலைட்டுகள் ஆதிக்கம் மிகுந்த 13 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவு பெறுகிறது.

இங்கு தெலுங்கானா ராஷ்டிர சமிதி, காங்கிரஸ்-தெலுங்குதேசம், பாரதீய ஜனதா கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இதனால் பாதுகாப்பை கரு்ததில் கொண்டு ஓட்டுப்பதிவுக்கு மாநில பொலிசார், துணை ராணுவம், பிற மாநில பொலிஸ் படையினர் என சுமார் ஒரு லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்தோடு 446 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
முதல்முறையாக இங்கு வாக்காளர்கள், தாங்கள் யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை தெரிந்து கொள்வதற்கான ஒப்புகைச்சீட்டு முறை அமல்படுத்தப்படுகிறது.
மேலும் 2 கோடியே 80 லட்சம் வாக்காளர்களுக்காக 32 ஆயிரத்து 815 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் ஒரு திருநங்கை உள்பட 1,821 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here