‘பைசைக்கிள் கிக்’ கோல் மூலம் திகைக்க வைத்த ரொனால்டோ

டியூரினில் நடைபெற்ற யுஏஃபா சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ரியால் மேட்ரிட் 3-0 என்ற கோல் கணக்கில் யுவண்டஸ் அணியை காலிறுதி முதல் லெக் ஆட்டத்தில் வீழ்த்தியது.

இதில் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்த பைசைக்கிள் கிக் கோல் ரொனால்டோ ரசிகர்களை எழுச்சியுறச் செய்துள்ளது.

ரியால் மேட்ரிட் வீரர் டேனி கார்வஜல் பந்தை லேசாக தூக்கி விட கோல் அருகில் இருந்த ரொனால்டோ கோலுக்கு முதுகைக் காட்டிக் கொண்டிருந்த நிலையில் அப்படியே காற்றில் கால்களைத் தூக்கி பின்புறமாக பந்தை கோல் நோக்கி அடிக்க அது அபாரமான கோலானது. கோல் கீப்பர் கியான்லுகி பஃபான் ஒன்றும் செய்ய முடியவில்லை. ரியால் மேட்ரிட் 2-0 என்று முன்னிலை பெற்றது.

மைதானத்தில் இருந்த யுவண்டஸ் ரசிகர்களே இந்த கோலைப் பார்த்து அதிசயித்து கரகோஷம் செய்தனர்.

இந்தக் கோலுக்கு சற்று முன்னர்தான் ரொனால்டோ அடித்த ஷாட் வைடாகச் செல்ல அவரை ரசிகர்கள் கடுமையாக கேலி செய்தனர். இத்தனைக்கும் முதல் கோலை அடித்தவரும் ரொனால்டோதான். 3வது நிமிடத்திலேயே முதல் கோலை அடித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here